முந்தய பக்கம்

அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

31 Jan 2026, 5:27 pm
அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
<p><strong>அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு</strong></p> <p>சிதம்பரம், ஜன.31- &nbsp;சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் தமது போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர். பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் மற்றும் ஓய்வூதியர் கூட்டமைப்பு சார்பில், 7 ஆண்டுகளுக்கு முன்பு பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இதுவரை ஓய்வூ தியம் வழங்காதது உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 27-ஆம் தேதி முதல் தொடர் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்று வந்தது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பிப்ரவரி 2-ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது வரும் பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறை வேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இந்த உறுதியை ஏற்று, பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் போராட்டத்தைத் தற்காலிகமாக விலக்கிக்கொள்வதாக ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவித்தனர். பிப்ரவரி 8-க்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் 9-ஆம் தேதி முதல் மீண்டும் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram