தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரம் காந்தி சிலை அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் தட்டேந்தி பிச்சை எடுத்து போராட்டம்

1 hour before
சிதம்பரம் காந்தி சிலை அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் தட்டேந்தி பிச்சை எடுத்து போராட்டம்

சிதம்பரம் காந்தி சிலை அருகே அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் தட்டேந்தி பிச்சை எடுத்து போராட்டம்

சிதம்பரம் காந்தி சிலை அருகே அண்ணாமலைப்பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர்.

சிதம்பரம், செப் 22-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசி ரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படவில்லை. அவற்றை உடனடி யாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் பணிகளைப் புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதனை அரசு கண்டு கொள்ளாததால் செவ்வாய்க்கிழமை (செப்.22) பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிதம்பரம் நகரில் உள்ள காந்தி சிலை அருகே தட்டு ஏந்தி முதல்வர் விஜய் படத்தை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, அரசு அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் ஆசிரியர் ஊழியர், ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்களை வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.இந்தப் போராட்டத்தால் காந்தி சிலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.