தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

11 Jul 2026, 10:35 pm
சென்னை விரைவு செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2 நாள் தேசிய கருத்தரங்கம்

சிதம்பரம், ஜூலை 11- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை சார்பில், ஒன்றிய அரசின் ஆர்யுஎஸ்ஏ திட்ட நிதி உதவியுடன் “இந்தியா–அமெரிக்க உறவுகள் மற்றும் முக்கிய திருப்புமுனைகள்” என்ற தலைப்பில் இருநாள் தேசிய கருத்தரங்கம் பல்கலைக்கழக நூலக அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவில் ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி கமாண்டர் சேஷாத்திரி வாசன், இந்தியா–அமெரிக்க உறவுகளின் வளர்ச்சி மற்றும் பாகிஸ்தான்–அமெரிக்க உறவுகளின் தாக்கம் குறித்துப் பேசினார். துணை வேந்தர் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் அறிவுடை நம்பி, இரு நாடுகளின் உறவுகளின் எதிர்கால முக்கியத்து வத்தை விளக்கினார். கலைப்புல முதல்வர் அருள் உரை யாற்றினார். துறைத் தலைவர் பி. சக்திவேல் வரவேற்க, அமைப்புச் செயலாளர் பேராசிரியர் டி. தேவநாதன் தலைப்பை அறிமுகப்படுத்தினார். ஒருங்கிணைப்பாளர் சி. சுப்பிரமணியன் நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் வரலாறு, பொருளாதாரம், பாது காப்பு, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, காலநிலை மாற்றம், சீனாவின் தாக்கம் மற்றும் புலம்பெயர் இந்தியர்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. இதன் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.

மஞ்சள் வாரச் சந்தையில் ரூ.81 லட்சத்திற்கு வர்த்தகம்

கள்ளக்குறிச்சி,ஜூலை 11- கள்ளக்குறிச்சி சி.எம்.எஸ். வேளாண்மை உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந் தோறும் வியாழக்கிழமை மஞ்சள் சந்தை நடைபெறு கிறது. அந்த வகையில் வெள்ளியன்று நடைபெற்ற சந்தையில், கள்ளக்குறிச்சி, சிறுவங்கூர், எறையூர், தண்டலை, சின்னசேலம், பாக்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 92 விவசாயிகள், தங்களது விளைபொருட்களான 830 மூட்டை மஞ்சளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.

விலை விவரம் (மூட்டை ஒன்றுக்கு)

விரலி ரகம்: 580 மூட்டைகள் விற்ப னைக்கு வந்தன. அதிக பட்ச விலையாக ரூ.19,009ம், குறைந்தபட்ச விலை யாக ரூ.15,909-ம் நிர்ண யிக்கப்பட்டது. உருண்டை ரகம்: 242 மூட்டைகள் வரத்து இருந்த நிலையில், அதிகபட்சம் ரூ.15,609 முதல் குறைந்த பட்சம் ரூ.13,809 வரை விலை போனது. பனங்காளி ரகம்: 8 மூட்டைகள் வரத்து இருந்தது. இதன் அதிக பட்ச விலை ரூ.32,009 ஆகவும், குறைந்தபட்ச விலை ரூ.25,009 ஆகவும் இருந்தது. ஆத்தூர், நாமகிரிப்பேட்டை, சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் மஞ்சளைப் போட்டி போட்டு கொள்முதல் செய்தனர். சந்தையில் மொத்தம் ரூ.81 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக சி.எம்.எஸ். செயலாட்சியர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் போதுமான அளவு உரங்கள் கையிருப்பு வேளாண்மை இணை இயக்குநர் தகவல்

கடலூர், ஜூலை 11- கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் தேவைக்கேற்ப போதுமான அளவில் உரங்கள் இருப்பில் உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் பூ.வசந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "ரயில் மூலம் கொரமண்டல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 1,336 மெட்ரிக் டன் யூரியாவில், 296 மெட்ரிக் டன் கூட்டுறவு சங்கங்களுக்கும், 460 மெட்ரிக் டன் தனியார் உரக்கடைகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. மீதமுள்ள உரம் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கூடுதலாக 756 மெட்ரிக் டன் யூரியா ரயில் மூலம் மாவட்டத்திற்கு வந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் யூரியா 4,193 மெட்ரிக் டன், டி.ஏ.பி 758 மெட்ரிக் டன், பொட்டாஷ் 642 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் 3,913 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளன. விவசாயிகள் மண் வள அட்டையின் பரிந்துரைப்படி மட்டுமே உரமிட வேண்டும். யூரியாவை அதிகமாகப் பயன்படுத்தாமல், அங்கக மற்றும் உயிர் உரங்களைச் சேர்த்துச் சமச்சீராக உரமிடுவ தன் மூலம் மண் வளம் மேம்படும்; இதன் விளைவாக உரச்செலவு குறைந்து மகசூல் அதிகரிக்கும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.