அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் போராட்டம்: அரசு தீர்வு காண மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!
13 Nov 2025, 12:00 pm
<span style="font-family:"Open Sans",sans-serif">அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
<span style="font-family:"Open Sans",sans-serif">இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் கூட்டமைப்பு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி வழங்க வேண்டிய ஊதியத்தில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள தவணைத் தொகை, முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பு ஊக்கத் தொகை போன்றவைகள் வழங்கப்பட வேண்டும். ஒப்பந்தப் பணியில் உள்ளவர்களை நிரந்தரம் செய்வது, காலிப் பணியிடங்களில் புதிய பணி நியமனம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த மூன்று நாட்களாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
<span style="font-family:"Open Sans",sans-serif">நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு நடத்தும் போராட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.
<span style="font-family:"Open Sans",sans-serif">அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாடு அரசும், உயர்கல்வித்துறை அமைச்சரும் நேரடியாகத் தலையிட்டு விரைந்து சுமுகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.