அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் தரமற்ற உணவு இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
2 Nov 2026, 11:18 pm

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் தரமற்ற உணவு இந்திய மாணவர் சங்கம் போராட்டம்

சிதம்பரம், நவ.2-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள தாமரை மாணவிகள் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாணவி கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக தாமரை விடுதியில் முதுகலைப் படிப்பு பயிலும் மாணவிகள் தங்கி வருகின்றனர். இந்நிலையில், விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விடுதி காப்பாளர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, திங்கள்கிழமை மாலை இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் விடுதி வாயில் முன்பு மாணவிகள் தரை யில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என்றும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாகச் செய்து தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக கல்வி புல முதல்வர் அருள், விடுதிகள் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். இனிவரும் காலங்களில் எவ்வித குறைபாடுகளும் இன்றி தரமான உணவு வழங்குவதுடன், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் என உறுதியளித்தனர்.

இதையடுத்து மாணவிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்தப் போராட்டத்தில் இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பூபதி, மாவட்ட இணைச் செயலாளர் சிவ

நந்தினி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.