முந்தய பக்கம்

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல முதல்வராக டாக்டர் சி.ஜி. சரவணன் பொறுப்பேற்பு

19 Jun 2026, 1:11 am
அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல்  புல முதல்வராக டாக்டர் சி.ஜி. சரவணன் பொறுப்பேற்பு
<p><strong>அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல முதல்வராக டாக்டர் சி.ஜி. சரவணன் பொறுப்பேற்பு</strong></p><p>​​​​​​​சிதம்பரம், ஜூன் 18- சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் புலத்திற்கு புதிய முதல்வராக டாக்டர் சி.ஜி. சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் இயந்திரவியல் பொறியியல் துறை பேராசிரியராகவும், சுரங்கவியல் டிப்ளமோ திட்ட இயக்குநராகவும் பணியாற்றி வந்தவர். தற்பொழுது பொறியியல் புலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்து களைத் தெரிவித்துக் கொண்டனர். தனது புதிய பொறுப்பின் கீழ், பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram