அண்ணாமலைப் பல்கலை. ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க கோரிக்கை
4 Nov 2026, 11:39 pm

அண்ணாமலைப் பல்கலை. ஊழியர்களுக்கு தீபாவளி முன்பணம் வழங்க கோரிக்கை

சிதம்பரம், நவ 4-சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழ கத்தில் பணிபுரியும் தொகுப்பூதியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு இதுவரை தீபாவளி முன்பணம் வழங்கப்படாததால், அவர்களுக்கு உடனடியாக முன்பணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், பல்கலைக்கழக பதிவாளருக்கு கடிதம் அனுப்பி யுள்ளார்.

அக்கடிதத்தில், பல்கலைக்கழகத்தில் 420-க்கும் மேற்பட்ட என்.எம்.ஆர்., தொகுப்பூதிய மற்றும் தினக்கூலி ஊழியர்கள் 15 ஆண்டு களுக்கும் மேலாக பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கான முன்பணம் இதுவரை வழங்கப்படவில்லை.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் குடும்பங்கள் பண்டிகையைக் கொண்டாட சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஊழியர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு உடனடியாக தீபாவளி முன்பணம் வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.