வாண்டையாங்குப்பம் கிராமத்தில் வேளாண் பயிற்சித் திட்டம் துவக்கம்
9 May 2026, 2:37 am
<p><strong>வாண்டையாங்குப்பம் கிராமத்தில் வேளாண் பயிற்சித் திட்டம் துவக்கம்</strong></p><p>சிதம்பரம், மே 8- கடலூர் மாவட்டம் புவன கிரி அருகே உள்ள வாண்டை யாங்குப்பம் கிராமத்தில், அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் புல மாணவிகள் கிராமத்தில் தங்கிப் பயிற்சி பெறும் திட்டத்தின் (RAWE) துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு வாண்டை யாங்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் தலைமை தாங்கி, திட்டத்தைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழக வேளாண் புலத்தைச் சேர்ந்த ஜி-7 குழுவின் 11 மாணவி கள் இந்தக் கிராமத்தில் தங்கி விவசாயிகளுடன் இணைந்து களப்பணியில் ஈடுபட உள்ளனர். இவ்விழாவில் மாணவிகள், விவசாயிகளுக்குத் தேவை யான பல்வேறு நவீன மற்றும் இயற்கை வேளாண் நுணுக்கங் களை விளக்கிக் கூறினர். குறிப்பாக, இயற்கை விவசாயம், உர மேலாண்மை, மண்புழு உரம் தயாரிப்பு, மண் பரிசோத னையின் முக்கியத்துவம், நீர் மேலாண்மை மற்றும் களைக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் செயல்முறை விளக்கங்களை அளித்தனர். மேலும், விதை நேர்த்தி செய்தல் மற்றும் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவின் நிறைவாக விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
