தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும்!

12 Nov 2025, 3:20 pm
அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வு காண வேண்டும்!
<p><strong>அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 3-வது நாளாக தேர்வுகளைப் புறக்கணித்துப் போராட்டம்</strong></p> <p>சிதம்பரம், நவ. 12 - அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழி யர்கள் பேராசிரியர்கள் 3வது நாளாக தொடர்ந்து தேர்வுகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு நிதி மற்றும் நிர்வாக முறை கேடுகள் காரணமாக, கடந்த 2013 ஆம் &nbsp;ஆண்டு தமிழக அரசு இந்த பல்கலைக் கழகத்தை கையகப்படுத்தியது. &nbsp;அரசின் &nbsp;கட்டுப்பாட்டிற்கு வந்த பிறகு, பல்கலைக் கழகத்தில் ஏற்பட்ட நிதிச் சிக்கல்களைச் சரி செய்யும் நடவடிக்கையாக, மாணவர் களின் எண்ணிக்கைக்கு அதிகமாகப் பணி யாற்றிக் கொண்டிருந்த சுமார் 6 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் &nbsp;ஊழியர்கள் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்குப் பணிநிரவல் செய்யப்பட்டனர். இந்தச் சூழலில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழி யர்கள் பின்வரும் முக்கியக் கோரிக்கை களை வலியுறுத்தி, கடந்த ஐந்து ஆண்டு களுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஊதிய நிலுவைத் தொகைகள்: 7வது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகை கள் மற்றும் முனைவர் பட்டத்திற்கான &nbsp;ஊக்கத்தொகைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். அயற்பணி யிடத்தில் (On Deputation) உள்ள ஆசிரி யர்களை அவர்கள் தற்போது பணிபுரியும் கல்வி நிறுவனங்களிலேயே உடனடியாக உள்ளிணைப்பு செய்ய வேண்டும். பல்கலைக்கழகத் துறைகளில் உள்ள &nbsp;காலியிடங்களை அயற்பணியிட ஆசிரி யர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். மேலும், யுஜிசி மற்றும் தமிழக அரசின் விதி முறைகளின்படி, ஒருவருக்கு வாரத்திற்கு 16/14 மணிநேரம் என்ற வேலைப்பளுவின் அடிப்படையில் கணக்கிட்டு, பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்களைத் திரும்ப அழைக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு, அரசுத் துறைகளைப் போலவே, அனைத்துப் பணப்பயன்களும் ஓய்வுபெற்ற உடனேயே &nbsp;வழங்கப்பபடவேண்டும். ஆட்சிமன்றக்குழு மற்றும் கல்விக் குழுக்களில் (Academic Council) ஆசிரி யர் சங்கங்களுக்குப் போதுமான பிரதிநிதித் துவம் வழங்கப்பட வேண்டும். அனைத்து &nbsp;நிர்வாகப் பொறுப்புகளின் காலியிடங்க ளும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். மேலும், 3 ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த &nbsp;அனைவரும் நீக்கப்பட்டு, புதியவர்கள் உட னடியாக நியமிக்கப்பட வேண்டும். இந்தக் கோரிக்கைகளுக்கு அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் இது வரை சரியான தீர்வு எட்டாத நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியு றுத்திப் பல்கலைக்கழக ஆசிரியர் கூட்ட மைப்பு சார்பில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் &nbsp;உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்று வரு கிறது. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதி யாக, ஆசிரியர்கள் மாணவர்களின் தேர்வு களைப் புறக்கணித்துள்ளனர். பல்கலைக் கழக நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 12 அன்று 3-ஆவது நாளாக நாளாகப் போராட்டம் தொடர்ந்தது. முன்னதாக செவ்வாயன்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பழ. &nbsp;வாஞ்சிநாதன், சிதம்பரம் நகரச் செயலா ளர் ராஜா, மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் மல்லிகா, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு &nbsp;தெரிவித்தனர். &nbsp;சிபிஎம் சார்பில் சட்ட மன்றத்தில் இது குறித்துக் கவன ஈர்ப்புத் &nbsp;தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கோரிக்கை நிறை வேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடை பெறும் என போராட்டக்குழு அறிவித்து உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.