அண்ணாமலை 'அள்ளிவிட்ட' கணக்கு: திருப்பூரில் சிரிப்பு 'ஆர்டர்' அமோகம்!
12 Apr 2026, 5:30 am

அண்ணாமலை 'அள்ளிவிட்ட' கணக்கு: திருப்பூரில் சிரிப்பு 'ஆர்டர்' அமோகம்!

திருப்பூர் வெளிப்பாளையம் பகுதியில் பா.ஜ.க வேட்பாளர் எஸ்.தங்கராஜுக்கு ஆதரவாக அண்ணாமலை பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம், ஒரு 'மேஜிக் ஷோ' போல அமைந்திருந்தது. திருப்பூர் பின்னலாடைத் தொழில் துறையினரை "ஆர்டர் இல்லை" என்று நொந்து போயிருக்க, மேடையில் மைக் பிடித்த அண்ணாமலை, "ஒன்றிய அரசு உங்களுக்கு 31,317 கோடி ரூபாய் கடன் கொடுத்திருக்கிறது" என்று ஒரு புள்ளிவிவரத்தைத் தூக்கிப் போட்டார்.

நெருக்கடியால் 50 சதவீத நிறுவனங்கள் மூடிக் கிடக்க, 30 சதவீத நிறுவனங்கள் காலாவதி போன எந்திரத்தைத் தையல் இயந்திரமாக மாற்றிக் கொண்டுள்ள நிலையில், அண்ணாமலை கூறிய புள்ளிவிவரம் யாரை ஏமைற்ற? இதைக் கேட்டு அங்கிருந்த தொழில்துறையினர் "அந்தப் பணம் எங்கே? கிடைத்திருந்தால் ஏன் கம்பெனியை மூடப்போகிறோம்?" என எள்ளி நகையாடினர்.

இந்து முன்னணி பிரமுகர் காடேஸ்வரா சுப்ரமணியத்தின் அருகில் வைத்தது கொண்டு அண்ணாமலை வளர்ச்சி பற்றிப் பேசினார். விநாயகர் சதுர்த்திக்கு 'அன்பளிப்பு' கேட்டு மிரட்டியது, பணம் தராத கம்பெனியில் நடத்திய கட்டப்பஞ்சாயத்து என இந்து முன்னணியின் வரலாறு தெரிந்த திருப்பூர்க்காரர்களுக்கு, இது 'வளர்ச்சி'ப் பட்டியலில் வந்ததுதான் பெரிய நகைச்சுவை.