தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்கேப் ஆகப் பார்த்த அண்ணாமலை... கழுத்தைப் பிடித்த மேலிடம்!

2 Apr 2026, 3:50 pm
எஸ்கேப் ஆகப் பார்த்த அண்ணாமலை...  கழுத்தைப் பிடித்த மேலிடம்!
<p><strong>எஸ்கேப் ஆகப் பார்த்த அண்ணாமலை... &nbsp;கழுத்தைப் பிடித்த மேலிடம்!</strong></p> <p>தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கும் வேளையில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வேட்பாளர் &nbsp;பட்டியலை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. 27 தொகுதிகள் கையில் இருந்தும், களமிறங்க ஆள் இல்லாமல் &lsquo;கமலாலயம்&rsquo; வெறிச்சோடிக் கிடக்கிறது. சென்டிமென்ட் கார்டும் தில்லி செக்கும் ஆரம்பத்திலிருந்தே &ldquo;போட்டியிட மாட்டேன்&rdquo; என அடம்பிடித்த அண்ணாமலை, தந்தையின் உடல்நிலையைக் காரணம் காட்டித் தப்பிக்க முயன்றார். ஆனால், &ldquo;நீ நின்றால்தான் உன் ஆதரவாளர்கள் வேலை செய்வார்கள்&rdquo; எனப் பியூஷ் கோயல் மூலம் தில்லி மேலிடம் அவருக்குக் கடும் &nbsp;நெருக்கடி கொடுத்துள்ளது. வேறு வழியின்றிச் சம்மதித்த அண்ணாமலை, இப்போது வானதி சீனிவாசன் அல்லது சரஸ்வதி ஆகியோரின் தொகுதிகளைக் குறிவைத்து நிபந்தனை விதிக்கிறார். உள்ளுக்குள் ஒரு யுத்தம் மூத்த நிர்வாகிகளுக்கும் அண்ணா மலை ஆதரவாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் நடக்கும் &lsquo;பனிப்போர்&rsquo; &nbsp;கட்சியின் சீனியர்களைக் கடுப்பேற்றி யுள்ளது. இந்த கோஷ்டிப் பூசலால்தான் வேட்பாளர் பட்டியல் இன்னும் &lsquo;லோடிங்&rsquo; &nbsp;ஆகிக்கொண்டே இருக்கிறது. தோல்வி பயத்தில் ஒதுங்க நினைக்கும் அண்ணா மலையை, வலுக்கட்டாயமாக இழுத்து வந்து &lsquo;பலியாடாக்க&rsquo; மேலிடம் துடிக்கிறது. ஏப்ரல் 6 கிளைமாக்ஸ் அண்ணாமலை கேட்ட தொகுதியை மேலிடம் கொடுக்குமா அல்லது ஏதாவது ஒரு தொகுதியை அவர் மீது திணிக்குமா என்பது ஏப்ரல் 6-க்குள் தெரிந்துவிடும். வெற்றி பெறுவோம் என மார்தட்டியவர்கள், இன்று ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுக்கவே திணறுவது வேடிக்கையாக இருக்கிறது. தாமரை மலருமோ இல்லையோ, பா.ஜ.க-வுக்குள் சண்டை மட்டும் களைகட்டுகிறது!</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.