ஆர்.எஸ்.எஸ்-ன் “பி“ பிளான் தான் அண்ணாமலையின் புதிய கட்சி
7 Jun 2026, 10:39 pm
<p><strong>ஆர்.எஸ்.எஸ்-ன் “பி“ பிளான் தான் அண்ணாமலையின் புதிய கட்சி</strong></p><p>மாணிக்கம்தாகூர் எம்.பி. விமர்சனம் சிவகாசி, ஜூன் 7- பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய கட்சித் தொடங்கு வதற்கு ஆர்.எஸ்.எஸ் “பி“ பிளான் போட்டுக் கொடுத்துள்ளது என விருதுநகர் மக்க ளவை உறுப்பினர் மாணிக்கம்தாகூர் தெரி வித்தார். சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த ப.மாணிக்கம்தாகூர் கூறியதாவது: நேர்மையான ஆட்சியைத் தர முதல மைச்சர் விஜய் முயற்சிக்கிறார். இது ‘முதல் வன்’ படம் போல ஒரே நாளில் முடிவ தல்ல. பல்வேறு சவால்களை அவர் சந்திக்க வேண்டியிருக்கும். தூய்மையான அரசி யல் செய்ய நினைக்கும் விஜய்க்கு ராகுல் காந்தி துணையாக நிற்பார். தவெகவுடன் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளு மன்றத் தேர்தல்தலிலும் கூட்டணி நீடிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை மக்கள் இயக்கம் தொடங்கியுள்ளார் என்ற கேள்விக்கு, தமிழக மக்கள் காவி ஆடையையும், பாஜக வின் கொள்கைகளையும், தாமரை சின்னத் தையும் முழுமையாக நிராகரித்துவிட்டனர். 2002 முதல் ஜாதி அரசியல், ஆளுநர்கள் மூலமாக அரசியல் என பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்தும் குறைவான வாக்குகளே கிடைத்தது. எனவே, ‘பாஜக என்ற பெயரில் இனி தமிழ்நாட்டில் கடை நடத்த முடியாது, பேண்ட்டையும் சட்டையையும் மாற்றி விட்டுப் புது வேஷத்தில் வா’ என்று ஆர்எஸ்எஸ் தற்பொழுது அண்ணா மலைக்கு மாற்றுத் திட்டத்தை ‘பி’ பிளானை வகுத்துக் கொடுத்துள்ளது. காவி ஆடை யைக் கழற்றிவிட்டு வெள்ளைச் சட்டை போட்டு, ‘தமிழர் உரிமை, இந்தியர் பெருமை’ எனப் பேசினாலும், உள்ளே இருப்பது ஆர்எஸ்எஸ் சிந்தனைதான் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும். தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டியில் பள்ளி மாணவியின் மரணத்தின் போது அண்ணாமலை செய்த அரசியலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார் கள்” என தெரிவித்தார்.</p>
