அண்ணாமலை புதிய கட்சி? ஆர்எஸ்எஸ்-சின் 2501-ஆவது அமைப்பு
5 Jun 2026, 9:01 pm

அண்ணாமலை புதிய கட்சி? ஆர்எஸ்எஸ்-சின் 2501-ஆவது அமைப்பு

பெ.சண்முகம் சாடல்

சென்னை, ஜூன் 5 - பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை புதிய கட்சி துவங்குவது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் சமூகவலை தள பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஆர்.எஸ்.எஸ். ஏற்கெனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அதில், அண்ணாமலை தொடங்கும் அமைப்பு - 2501, அவ்வளவுதான்” என்று குறிப்பிட்டு ள்ளார்.

“பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகர மாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.

ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படு கிறார்கள் என்பதே, அண்ணாமலை போடுவது “மாரீச மான் வேடம்” என்பதை தமிழக மக்கள் நன்கு அறி வார்கள்!” என்றும் பெ. சண்முகம் சாடியுள்ளார்.