தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அண்ணாமலையின் ‘புதுக் கம்பெனி’ சங் பரிவாரத்தின் புதிய முயற்சியா? - அ. அன்வர் உசேன்

6 Jul 2026, 9:33 pm
அண்ணாமலையின் ‘புதுக் கம்பெனி’  சங் பரிவாரத்தின் புதிய முயற்சியா? - அ. அன்வர் உசேன்

அண்ணாமலையின் ‘புதுக் கம்பெனி’ சங் பரிவாரத்தின் புதிய முயற்சியா? - அ. அன்வர் உசேன்

சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகியதாகக் கூறிக்கொள்ளும் அண்ணாமலை “நாம் தலைவர்கள்” எனும் ஓர் அமைப்பைத் தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தில் இதுவரை சுமார் 18.8 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அதன் இணையதளம் தெரிவிக்கிறது. அதன் விபரப் படியே கூட, முதல் 24 மணிநேரத்தில் சுமார் 13 லட்சம் பேர் இணைந்தாலும், அடுத்த மூன்று நாட்களில் சுமார் 4 லட்சம் பேரும், அதற்கு அடுத்த 20 நாட்களில் வெறும் 1.8 லட்சம் பேர் மட்டுமே இணைந்தனர். அப்படியானால் இதன் உறுப்பினர் சேர்க்கை வேகம் பெருமளவு சரிந்து 18.8 லட்சத்தில் தேங்கியுள்ளது என்றே பொருள். அண்ணாமலை இயக்கத்தைப் பிரபலப்படுத்த சில ஊடகங்கள் அவரது பேட்டியை வெளியிடு கின்றன. ஆனால், அவை வெறும் வார்த்தை ஜாலங்களாகவும் வெற்று முழக்கங்களாகவுமே உள்ளன; கொள்கைகள் அல்லது அரசியல் சித்தாந்தம் குறித்து எதுவும் அதில் இல்லை. அதேசமயத்தில் இவரது இயக்கத்தை பாஜக தலைவர்கள் விமர்சிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதற்கிடையே தமது முதல் மாநாட்டை ஜூலை மாதத்தில் பொள்ளாச்சியில் நடத்த அண்ணாமலை அமைப்பு திட்டமிட்டுள் ளது. 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்தவுடன் இதனை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டத்தை யும் அவர் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் தனித்தன்மையும் அண்ணாமலையின் அசல் வார்த்தைகளும்

சமீபத்தில் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டின் தனித்தன்மை குறித்து பாஜக உட்பட தேசிய கட்சிகள் புரிந்து கொள்ளாதது குறித்துப் பேசுகிறார். “நான் முதலில் இந்தியன்; ஆனால் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்” எனக் கூறும் அண்ணா மலை, தனது ராஜினாமா கடிதத்தில், “தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்கின்ற மொழியை தேசிய கட்சிகள் பேசியதே இல்லை” என்று அப்பட்டமாகக் குறிப்பிடுகிறார்.

இதே கடிதத்தில் மேலும், “எனது மொழியின் வளமையில் பெருமை கொள்கிறேன்; எனது பண்பாட்டின் பலதரப்பட்ட வடிவங்களிலும் எனது பிரதேசத்தின் தனித்தன்மை கொண்ட பாரம்பரியத்திலும் பெருமை கொள்கிறேன்” என்றும் எழுதியுள்ளார்.

அண்ணாமலை தமிழ் மொழி, பண்பாடு மற்றும் அதன் பன்முகத்தன்மையில் பெருமை கொள்வதாகக் கூறினாலும், அந்தப் பெருமைகள் என்ன என்பதை விளக்க முன்வரவில்லை. அதை விளக்காதவரை இவை வெறும் வார்த்தை ஜாலங்களே.

கீழடி வெளிப்படுத்தும் பெருமதங்கள் இல்லாத நாகரிகம்; சங்க இலக்கியங்கள் முன்வைக்கும் வளமான வாழ்க்கை கூறுகள்; பௌத்தமும் சமணமும் முன்வைத்த முற்போக்கு அம்சங்கள்; கடவுள் மறுப்பு உட்பட தமிழ் தத்துவத்தின் மரபுகள்; வர்ணாசிரமக் கொள்கைகளுக்கு எதிரான முரண்பாடுகள்; வள்ளலார், அய்யா வைகுண்டர் ஆகியோரின் சமத்துவக் கருத்துக்கள்; அயோத்தி தாசர் தொடங்கி பெரியார், அம்பேத்கர் வரை முன்னெடுத்த சீர்திருத்தங்கள்; பொதுவுடைமை இயக்கம் முன்னெடுத்த நிலப்பிரபுத்துவ, சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான களப் போராட்டங்கள் மற்றும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்கள் எனத் தமிழ்நாட்டின் வரலாறு பன்முகத்தன்மை கொண்டது. இதன் விளை வாகவே இங்கு மத ஒற்றுமை நிலைபெற்றது; மொழி உரிமைப் போராட்டங்கள் நடந்தன.

இதில் எந்தப் பெருமையை அண்ணாமலை ஆதரிக்கிறார்? தமிழ் மக்களின் மத ஒற்றுமை யையா? அப்படியெனில் கடந்த கால தனது மதவாதச் செயல்களுக்கு வருந்துவாரா? இந்தி, சமஸ்கிருதத் திணிப்பை எதிர்ப்பாரா? மாநிலத்திற்கான கூடுதல் அதிகாரங்களைக் கேட்பாரா? தமிழ்நாட்டு மக்கள் இந்துத்துவா வையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்கின்ற னர், அதை ஏற்பாரா? இவற்றை விளக்கினால் முரண்பாடுகளில் சிக்கி அம்பலப்படுவார் என்பதால் அவர் விளக்க முனைவதில்லை. தமிழ்நாட்டின் மொழியைப் பேச வேண்டுமாயின் அவர் தன் கடந்த காலப் பாதையை நிராகரித்து மன்னிப்பு கேட்க வேண்டும். அது சாத்தியமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஐ.நா.வின் சொற்களைக் கடன் வாங்கிய வெற்று நோக்கங்கள்

இயக்க இணையதளத்தில் ஐ.நா. சபையின் “தொடர் வளர்ச்சிக்கான இலக்கிலிருந்து” சில அம்சங்களைக் கடன் வாங்கியுள்ளனர். வறுமை ஒழிப்புக்கு இயற்கை விவசாயம்; ஆரோக்கி யத்திற்கு மருத்துவக் கட்டமைப்புக்கு மாறாக விளையாட்டு; கல்விக்கு இலவசக் கல்வி நிலை யங்களுக்கு மாறாகத் தனிப்பட்ட முறையில் பாடம் சொல்லிக் கொடுப்பது; மின் தேவைக்குச் சூரிய ஒளி மின்சாரம் என முன்வைக்கப்படுகிறது. அசமத்துவத்தை அகற்ற வளங்களைப் பெறும் சம வாய்ப்பு வேண்டும் எனக் கூறப்பட்டாலும், அந்த வளங்களை யார் ஆக்கிரமித்துள்ளனர், தமிழ்நாட்டின் அசமத்துவ வெளிப்பாடுகள் என்ன என்பது பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. விவசாயத் தொழிலாளர்கள் பற்றிப் பேசாமல் வனம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தையே விவாதிக்கின்றனர். சுருக்கமாக, மக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சனைகளுக்கு முத லாளித்துவக் கட்டமைப்புக்குள்ளான தீர்வுகளைக் கூட இவ்வியக்கம் முன்வைக்கவில்லை.

பாஜகவின் புதிய பரிசோதனை

“அண்ணாமலை பாஜகவிலும் அண்ணா மலையாகவே இருந்தார்” என்ற கூற்றின்படி அவரது கடந்த காலத்தை நோக்கினால்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத மோதலை உருவாக்கும்படி பேசி, அதைத் ‘தமிழ்நாட்டின் அயோத்தி’ எனச் சங் பரிவாரம் அழைத்ததை ஆதரித்தார். கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புப் பிரச்சனையில் இந்து-முஸ்லிம் பகைமையை உருவாக்க முயன்றார். அன்னூரில் செமி-கண்டக்டர் ஆலை அமைவதை எதிர்த்துப் போராடியதால் அது குஜராத்துக்குச் செல்லும் சூழல் உருவானது. தஞ்சாவூர் மைக்கேல்பட்டி பள்ளி மாணவி யின் மரணத்தைக் கிறித்தவர்களுக்கு எதிராக மிகப்பெரிய கருத்தாக்கமாக்கி சிபிஐ வரை கொண்டு சென்றார். உதயநிதியின் சனாதன எதிர்ப்பு உரையை இந்துக்களுக்கு எதிரானது போலச் சித்தரித்தார். கோவில்கள் அறநிலையத்துறையின் கீழ் செயல்படுவதை எதிர்த்தார்; லவ் ஜிகாத், மத மாற்றம் போன்ற சங் பரிவாரக் கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமலாக்கினார். தங்கள் முயற்சியால் நேரடியாகக் காலுன்ற முடியாத பொழுது, புதிய வடிவத்தில் அண்ணாமலையின் இயக்கம் ஒரு சோதனை முயற்சியாகக் கையாளப்படுகிறதா எனும் ஐயத்தை புறம் தள்ள இயலாது. மதவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, உழைப்பாளர் பிரச்சனைகள் குறித்து இவ்வியக்கம் மறந்தும் பேசவில்லை. சங் பரிவாரம் எந்த வடிவத்தில் முயன்றாலும் தமிழ்நாட்டு மக்கள் அதனை முறியடிப்பார்கள் என்பது நிச்சயம்.

திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறதா கோ-ஆப்டெக்ஸ்?

சென்னை, ஜூலை 6 - தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமான ‘கோ–ஆப்டெக்ஸ்’ நிறுவனம், அதிகாரிகளின் தவறான அணுகுமுறைகளால் திட்டமிட்டுச் சீரழிக்கப்படுவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 145 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில், அண்மைக்காலமாகச் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வாடிக்கை யாளர்களுக்குத் துணிப்பைகள், அட்டைப் பெட்டிகள் வழங்குவது நிறுத்தப்பட்டு, சுட்லிக் கயிற்றால் கட்டிக் கொடுக்கப்படுகிறது. இதனால் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே வீண் சச்சரவுகள் ஏற்படுகின்றன.

நிதி மோசடியும் பாரபட்ச ஊதியமும்

கடந்த மார்ச் மாதம், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 49.60 லட்சம் ரூபாய், மூன்றாம் நபர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டது. சைபர் கிரைம் புகாருக்குப் பின் 19 லட்சம் ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 30.60 லட்சம் ரூபாய் குறித்து மூன்று மாதங்களாகியும் எவ்விதத் தகவலும் இல்லை; காரணமான அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. விற்பனை நிலையங்கள் மற்றும் கிடங்குகளில் கடும் பணியாளர் பற்றாக்குறை நிலவியும், புதிய தற்காலிக ஊழியர்களை நியமிக்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை. இதனால் நடப்பு ஊழியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆனால், தலைமை மற்றும் மண்டல அலுவலகங்களில் எவ்வித அரசாணையும் இன்றி தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு மாதம் 47 ஆயிரம் முதல் 1.20 லட்சம் ரூபாய் வரை வாரி வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, மீண்டும் தற்காலிக ஊழியர்களாகச் சேர்ந்து பல ஆண்டுகளாக எவ்விதப் பணியும் செய்யாமல் சம்பளம் பெறுகின்றனர்.

மொபைல் போன் ஆடம்பரம்

பயன்பாட்டில் உள்ள மொபைல் போன்கள் நல்ல நிலையில் இருந்தபோதிலும், 18 லட்சம் ரூபாய் செலவில் புதிய போன்களை வாங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதில் முதன்மை பொது மேலாளருக்கு 1 லட்சம், ஆலோசகருக்கு 70 ஆயிரம், மண்டல மேலாளர்களுக்குத் தலா 44 ஆயிரம் ரூபாய் என நிதி விரயம் செய்யப்படுகிறது. இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகளைப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு உடனடியாகத் தலையிட்டுச் சரிசெய்ய வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.