தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிர்ச்சியில் அண்ணாமலை ‘தம்பிகள்’ மோகன் ஜி-யின் தத்துவப் புலம்பல்!

4 Apr 2026, 4:02 pm
அதிர்ச்சியில் அண்ணாமலை ‘தம்பிகள்’ மோகன் ஜி-யின் தத்துவப் புலம்பல்!
<p><strong>அதிர்ச்சியில் அண்ணாமலை &lsquo;தம்பிகள்&rsquo; மோகன் ஜி-யின் தத்துவப் புலம்பல்! </strong></p> <p>தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் 27 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அண்ணாமலை ஆதரவாளர்களுக்குப் பேரதிர்ச்சியை அளித்துள்ளது. அண்ணாமலை போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், அஸ்வத்தாமன், அமர் பிரசாத் ரெட்டி போன்ற &lsquo;அண்ணாமலை ஆர்மி&rsquo;யின் முக்கியப் பெயர்களும் பட்டியலில் இடம்பெறவில்லை. மோகன் ஜி-யின் தத்துவப் புலம்பல் வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், பா.ஜ.க ஆதரவாளரும் இயக்குநருமான மோகன் ஜி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட தத்துவப் புலம்பல் வைரலாகி வருகிறது. &ldquo;25 ஆண்டுகளாகச் சித்தாந்தத்திற்காக உழைத்து, பதவிகள் ஏதுமின்றி வழக்கு மட்டுமே வாங்கி, முகம் தெரியாமல் உழைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்; இளைஞர்களே அரசியல் கற்றுக்கொள்ளுங்கள்&rdquo; என அவர் பதிவிட்டுள்ளார். தம்பிகளின் குழப்பம் இதைப் பார்த்த நெட்டிசன்கள், &ldquo;லிஸ்ட்டில் பெயர் இல்லாததால் அண்ணாமலை தம்பிகள் ஏற்கெனவே அப்செட்டில் இருக்கிறார்கள், இதில் மோகன் ஜி-யின் இந்தப் பதிவு &lsquo;உழைத்தால் வழக்குதான் மிஞ்சும்&rsquo; என்பதை உறுதிப்படுத்துகிறதா?&rdquo; என நக்கல் செய்து வருகின்றனர். அண்ணாமலைக்கே சீட் வழங்கப்படாத நிலையில், சித்தாந்தத்தை விட சீனியாரிட்டி மற்றும் மேலிட செல்வாக்கே பா.ஜ.க-வில் எடுபடுகிறது என்பதை இந்தப் பட்டியல் உணர்த்தியுள்ளது. தம்பிகளின் &ldquo;ஒப்பாரி&rdquo; ஒருபுறம் இருக்க, மோகன் ஜி-யின் இந்தப் புலம்பல் சமூக வலைதளங்களில் பெரிய நகைச்சுவையாக மாறியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.