போலி பேராசிரியர்களை ஒழிக்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை
3 Jun 2026, 11:26 pm
<p><strong>போலி பேராசிரியர்களை ஒழிக்க அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை</strong></p><p>சென்னை, ஜூன் 3- பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் பணிபுரிவதைத் தடுக்கும் வகையில், பேராசிரியர்களின் புவிசார் குறி யீடு கொண்ட புகைப்படங்களைச் சரி பார்ப்பது மற்றும் ஆய்வுகளை வீடியோ பதிவு செய்யும் பணிகளை அண்ணா பல்க லைக்கழகக் குழுவினர் தொடங்கியுள்ளனர். மேலும், முகம் மூலம் அங்கீகரிக்கும் புதிய முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் 463 பொறியியல் கல்லூரிகள் 2026-27 கல்வி ஆண்டிற்கான அங்கீகார நீட்டிப் பிற்கு விண்ணப்பித்துள்ளன. இது குறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வி. குமரேசன் கூறுகையில், ஆய்வுக்குழுவினர் பேராசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள், அனுபவம் மற்றும் ஆராய்ச்சி விவரங்களைச் சரிபார்ப்பதுடன், ஆய்வக மற்றும் உள்கட்டமைப்பு வசதி களையும் ஆய்வு செய்து வருவதாகத் தெரி வித்துள்ளார். இந்த ஆய்வுகள் ஜூன் 10-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்றும், தகுதியான கல்லூரிகளுக்கான அங்கீகார நீட்டிப்பு ஜூன் 29-இல் பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியாவதற்கு முன்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். புகார்களும் பின்னணியும் அதேநேரம், அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு விதிகளின்படி 65 வயது வரை பேராசிரியர்கள் பணியாற்ற லாம் என்றாலும், 60 வயதைக் கடந்த பேராசிரியர்களைச் சில ஆய்வுக்குழுவினர் ஏற்பதில்லை என்றும், முறையான காரணங் களால் விடுப்பில் இருப்பவர்களைக் கூட அனுமதிப்பதில்லை என்றும் கல்லூரி முதல்வர்கள் தரப்பில் புகார்கள் எழுந்துள் ளன. போலி பேராசிரியர் விவகாரத்தில் பல்கலைக்கழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு நடக்கும் முதல் நேரடி ஆய்வு இதுவாகும். கடந்த 2023-24 கல்வி ஆண்டில் 350-க்கும் மேற்பட்ட பேராசிரியர் கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் பணி யாற்றியதாக ‘அறப்போர் இயக்கம்’ என்ற சமூக நல அமைப்பு அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகம் நடத்திய விசாரணையில் 1,000-க்கும் மேற்பட்ட போலி பேராசிரியர்கள் இருப்பது கண்டறியப் பட்டது குறிப்பிடத்தக்கது.</p>
