முந்தய பக்கம்

அண்ணா சாலை மேம்பாலம் செப்டம்பரில் திறக்க இலக்கு

25 May 2026, 2:29 am
அண்ணா சாலை மேம்பாலம் செப்டம்பரில் திறக்க இலக்கு
<p><strong>அண்ணா சாலை மேம்பாலம் செப்டம்பரில் திறக்க இலக்கு</strong></p><p>சென்னை, மே 24- சென்னையின் முக்கியப் போக்கு வரத்து நரம்பான அண்ணா சாலை யில், சைதாப்பேட்டை முதல் தேனாம் பேட்டை வரை 3.2 கிலோமீட்டர் நீளத் திற்கு ரூ.485 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளன. இந்தியாவிலேயே முதன்முறை யாக, சென்னை மெட்ரோ ரயிலின் இரட்டை நிலத்தடிச் சுரங்கப்பாதை களுக்கு நேர் மேலே எவ்விதப் பாதிப்பும் இன்றி இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருவது இதன் சிறப்பம்சமாகும். இதற்காக மகாராஷ்டிரா, கோவா மற்றும் ஹைதராபாத் ஆகிய மாநிலங்களிலிருந்து முன்கூட்டியே வார்ப்பு செய்யப்பட்ட கான்கிரீட் கட்ட மைப்புகள் கொண்டுவரப்பட்டுப் பொருத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் மற்றும் சர்வதேச எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்ட தொய்வைத் தாண்டி, தற்போது பணிகள் விறுவிறுப் பாக நடைபெற்று வருவதால், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பாலத்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்க மாநில நெடுஞ்சாலைத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. அதே நேரம், கட்டுமானப் பகுதிகள் அருகே தற்காலிகப் பேருந்து நிழற்குடைகளை அமைக்க வேண்டும் என்றும், மேலிருந்து தண்ணீர் கொட்டுவதைத் தடுத்துப் பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram