அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் 263 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக! அமைச்சர் விஜய பாலாஜியிடம் சிஐடியு வலியுறுத்தல்
25 Jun 2026, 11:23 pm
<p><strong>அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் 263 தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திடுக! அமைச்சர் விஜய பாலாஜியிடம் சிஐடியு வலியுறுத்தல்</strong></p><p>தேனி, ஜூன் 25- ஆண்டிபட்டி அருகே செயல்பட்டு வரும் அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் பணியாற்றும் 263 தொழிலா ளர்களை உயர்நீதிமன்ற உத் தரவின்படி பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு பஞ் சாலை தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அண்ணா கூட்டுறவு நூற் பாலையில் புதன்கிழமை கைத் தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அப் போது சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.சண்முகம், மாவட்டத் தலைவர் டி. ஜெயபாண்டி, மாவட்டப் பொருளாளர் சு.வெண்மணி ஆகியோர் தலைமையில், சிஐடியு பஞ்சாலை தொழிலா ளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் பி.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.லட்சுமண தாஸ் மற்றும் மாவட்டப் பொருளாளர் பி.கமல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் பணிபுரியும் 263 தொழிலாளர் களை உயர்நீதிமன்ற உத்தர வின்படி பணி நிரந்தரம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தொழிலாளர் களின் பணிப் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது.</p>
