அண்ணா கூட்டுறவு நூற்பாலை தனியாருக்கா? சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
23 May 2026, 10:24 pm

அண்ணா கூட்டுறவு நூற்பாலை தனியாருக்கா? சிஐடியு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி, மே 23- ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலையை தனியாருக்கு கொடுப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நூற்பாலை முன்பு சிஐடியு பஞ்சாலை தொழிலாளர் சங் கத்தின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

துணிநூல் துறை அதி காரிகளின் சுயநலத்திற்காக தொழிலாளர்களை தனியார் நிறுவனத்திற்கு அடகு வைக்கக் கூடிய நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்.

நூற்பாலையில் 20 ஆண்டு பணிபுரிந்த தினக்கூலி தொழி லாளர்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில் நிரந்தரம் செய்ய வேண்டும்.

தொழி லாளர்களுக்கு எதிரான தடையாணையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு பஞ்சாலை தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.லட்சுமணதாஸ் தலைமை வகித்தார்.

மாவட்ட துணைத் தலைவர் கமல்தாஸ் முன் னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் டி.வெங்கடேசன் தொடங்கி வைத்து பேசினார்.

சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் டி.ஜெயபாண்டி, மாவட்டச் செயலாளர் ஜி.சண்முகம், மாவட்ட பொருளாளர் எஸ்.வெண்மணி ஆகியோர் பேசி னர்.