ண்ணா பிறந்தநாள் விளையாட்டுப் போட்டிகள் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ, ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தனர்
yesterday
<p>அ<strong>ண்ணா பிறந்தநாள் விளையாட்டுப் போட்டிகள் ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ, ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தனர்</strong></p><p>நாகர்கோவில், நவ.15-முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி ஞாயிறன்று காலை நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.இப்போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் கு.வினு முன்னிலை வகித்தார். இதில் 17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ மற்றும் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ என்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வங்கி பரிமாற்றம் மூலம் வழங்கப்பட்டது.</p>
