திருநெல்வேலி விரைவு செய்திகள்
3 Nov 2026, 10:12 pm

திருநெல்வேலி விரைவு செய்திகள்

சொத்துக் குவிப்பு வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ- குடும்பத்தினர் விடுவிப்பு

தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி,நவ.3-கடந்த 2001-2006 அதிமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்துத் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் பதவி வகித்தார். இக்காலகட்டத்தில் அவர் தனது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களைச் சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தன.

இதனைத் தொடர்ந்து, 2006-இல் அமைந்த திமுக ஆட்சிக் காலத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் தனது பெயரிலும் தனது குடும்பத்தினர் பெயரிலும் ரூ.4 கோடியே 90 லட்சம் மதிப்பிலான சொத்துக்களைக் குவித்ததாகத் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்புச் சாட்சிகளிடம் விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கில் நவம்பர் 3 அன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நவம்பர் 3 அன்று வழக்கை விசாரித்த நீதிபதி சுபாதேவி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினரை இவ்வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து உத்தரவிட்டார். இவ்வழக்கையொட்டி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சுரண்டையில் மின்சாரம் தாக்கி கட்டிடத் தொழிலாளி பலி

தென்காசி, நவ. 03-தென்காசி மாவட்டம், சாம்பவர்வடகரை, புளியம்பட்டி தெருவைச் சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் முருகன் என்ற சுரேஷ் (18).இவர் சுரண்டை சிவகுருநாதபுரம் பாறையடி தெருவில் உள்ள ஒரு வீட்டின் மூன்றாவது மாடியில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது ஈரமாக இருந்த சுவரில் பொருத்தப்பட்டிருந்த மின்சாரப் பெட்டியைத் திறந்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.3 கோடியில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள் அமைச்சர் ஸ்ரீநாத் திறந்து வைத்தார்

தூத்துக்குடி,நவ.3-தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முள்ளக்காடு, குரூஸ்புரம் ஆகிய பகுதிகளில் 15 ஆவது நிதிக் குழு (ம) சுகாதார மானிய நிதியின் கீழ் தலா ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டடத்தினை தமிழக மீன்வளம்- மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் நவம்பர் 3 அன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யாழினி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு தள்ளுபடி விற்பனை மண்டல மேலாளர் தகவல்

திருநெல்வேலி, நவ. 3-கோ-ஆப்டெக்ஸ் நெல்லை மண்டல மேலாளர் ஆர்.ஜி. பத்மராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர் வாங்கும் துணிகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அனைத்து வாடிக்கையாளர்கள் வாங்கும் துணிகளுக்கும் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி கோ-ஆப்டெக்சில் வழங்கப்படுகிறது. எனவே வாடிக்கையாளர் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தீபாவளியையொட்டி குற்றச் சம்பவங்களை தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்புமாநகர காவல்துறை ஆணையாளர் பேட்டி

திருநெல்வேலி நவ. 3-நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் சாலைவிபத்துகளில் சிக்குபவர்களை மீட்பது மற்றும் முதலுதவி அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் மருத்துவமனை பங்களிப்புடன் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மாநகரகாவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய் பேசுகையில், நம் நாட்டில் சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது மிகுந்த வேதனைக்குரியது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு போதிய விழிப்புணர்வு மற்றும் முறையான முதலுதவி பயிற்சி இல்லாததே முக்கிய காரணமாக அமைகிறது.

விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றினால் காவல்துறையினர் வழக்கில்சாட்சியாக சேர்த்து அலைக்கழித்து விடுவார்களோ? என்ற பயம் பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இந்த அச்சம் முற்றிலும் தேவையற்றது. விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுபவர்கள் தாங்களாக விரும்பினால் மட்டுமே சாட்சி கூறலாம். யாரையும் கட்டாயப்படுத்த மாட்டோம் என்றார்.

பின்னர் காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 6, 7மற்றும் 8ஆகிய தேதிகளில் குற்றங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு வாகனச் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே பேரிகாடுகள் அமைத்து கண்காணிக்கவும், நகரும் கண்காணிப்பு வாகனங்கள் மூலமாக கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் பத்திரமாக தங்களது உடைமைகளை பார்த்துக்கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின்பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். போலீஸ் அறிவுறுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை பொதுமக்கள் சரியாக கடைப்பிடித்திட கேட்டுக் கொள்கிறோம். தீபாவளியை முன்னிட்டு நெல்லைமாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுப்பதற்காக ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.