தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காப்புக்காட்டில் குப்பைகளை உண்ணும் “மிளா” தாங்கல் மண்டலத்தை பாதுகாக்க விலங்கு நல ஆர்வலர் வலியுறுத்தல்

20 Feb 2026, 2:39 pm
காப்புக்காட்டில் குப்பைகளை உண்ணும் “மிளா” தாங்கல் மண்டலத்தை பாதுகாக்க விலங்கு நல ஆர்வலர் வலியுறுத்தல்
<p><strong>காப்புக்காட்டில் குப்பைகளை உண்ணும் &ldquo;மிளா&rdquo; தாங்கல் மண்டலத்தை பாதுகாக்க விலங்கு நல ஆர்வலர் வலியுறுத்தல்</strong></p> <p>நெல்லை, பிப். 20- திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவி வனப்பகுதியில், மிளா (கட மான்) ஒன்று கால்நடைகளுடன் சேர்ந்து அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உண்ணும் வீடியோ &nbsp;சமூக வலைதளங்களில் வைரலாகி யது. இந்த இடம் களக்காடு முண்டந் துறை புலிகள் காப்பகத்தின் தாங்கல் மண்டலத்திற்குள் (பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல், ஏரிகள் அல்லது நிலப் பரப்பு) வருவதாகக் கூறப்படுகிறது. &nbsp;இந்நிலையில், இதுதொடர்பாக விலங்கு நல ஆர்வலர் தாரிக் ராஜா &nbsp;கூறுகையில், &ldquo;களக்காடு தாங்கல் மண்டலத்திற்குள் கடந்த ஓராண்டாக வனப்பகுதிக்குள் குப்பை கொட்டப் படுகிறது. இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் வனத்துறை மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது &ldquo;மிளா&rdquo; குப்பைகளை தின்னும் காட்சி வெளியாகியுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் விலங்குகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, குப்பையில் உள்ள கண்ணாடித் துண்டுகள் விலங்குகளுக்குக் காயத்தை ஏற் படுத்துகின்றன. பாபநாசம், களக்காடு &nbsp;போன்ற பகுதிகளில் தீவிரக் கண் காணிப்பு இருக்கும் நிலையில், சேரன் மகாதேவி பகுதியில் மட்டும் இத்தகைய அலட்சியம் நிலவுவது ஏன்?&rdquo; என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அம்பாசமுத்திரம் கோட்டத் துணை இயக்குநர் மற்றும் வனவிலங்கு காப்பாளர் எல்.சி.எஸ்.ஸ்ரீகாந்த் கூறு கையில், &ldquo;குப்பைகளை உடனடியாக அகற்றக் கோரி உள்ளாட்சி நிர்வாகத் திற்கு ஏற்கெனவே மூன்று முறை கடி தம் எழுதியுள்ளோம். தற்போது, பேரூ ராட்சி உதவி இயக்குநர் மற்றும் தமிழ் நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளரைத் தொடர்புகொண்டு, உடனடி நடவடிக்கை எடுக்க வும் முறையான கழிவு மேலாண்மை யை உறுதி செய்யவும் வலியுறுத்தி யுள்ளேன். உள்ளாட்சித் துறை அதிகாரிகள் வனப்பகுதியில் உள்ள கழிவுகள் விரைவில் அகற்றப்படும்&rdquo; என அவர் கூறியுள்ளார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.