நிதி மோசடியை அம்பலப்படுத்திய நிறுவனங்களை மிரட்டும் அனில் அம்பானி
14 Nov 2025, 1:26 pm
<p><strong>நிதி மோசடியை அம்பலப்படுத்திய நிறுவனங்களை மிரட்டும் அனில் அம்பானி</strong></p>
<p>அனில் அம்பானியின் நிறுவனம் சுமார் 41,921 கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட புலனாய்வு இணையதளம் மற்றும் முன்னணி பத்திரிகைகள் மீது அனில் அம்பானி வழக்குத் தொடுத்துள்ளார். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 41,921 கோடிக்கும் அதிகமாக நிதி மோசடியில் ஈடுபட்டதை அம்பலப் படுத்தி பிரபல புலனாய்வு இணைய தளம் ஒன்று கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதியன்று செய்தி ஒன்றை வெளியிட்டது. இந்த நிலையில் முறை கேட்டை வெளியே கொண்டு வந்த புல னாய்வு இணைய தளம் மற்றும் பெயர் குறிப்பிடப்படாத பிற முன்னணி பத்திரி கை நிறுவனங்களை மிரட்டும் வகையில் அந்நிறுவனங்களின் மீது அனில் அம்பானி தில்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.</p>
