அனில் அம்பானியின் ரூ.1,021 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை
11 Jul 2026, 8:38 pm
<p><strong>அனில் அம்பானியின் ரூ.1,021 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை</strong></p><p>ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவ னங்கள் தொடர்பான பணமோசடி (ரூ. 15,548 கோடி) வழக்கில், அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத் தின் சொத்துகளை அமலாக்கத்துறை தொடர்ச்சியாக முடக்கி வருகிறது. இந்த மோசடி வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இது வரை ரிலையன்ஸ் குழுமத்தின் ரூ.20,367 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக் கப்பட்டுள்ளன. அதே போல அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின்படி ரூ. 77.86 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில், தற்போது அனில் அம்பானி க்குச் சொந்தமான ரூ.1,021 கோடி மதிப்பி லான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.</p>
