அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆவேச காளைகள்... அடக்கிய வீரர்கள்
17 Jan 2026, 2:42 pm
<p><strong>அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆவேச காளைகள்... அடக்கிய வீரர்கள்</strong></p>
<p>பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17 சனிக்கிழமையன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து பார்வையிட்டார். 1100-க்கும் மேற்பட்ட காளைகளும் 900-க்கும் மேற்பட்ட வீரர்களும் களம்கண்ட ஜல்லிக்கட்டு போட்டியை வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு .வெங்கடேசன், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.</p>
