கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
14 Feb 2026, 4:33 pm

சாலையை சீரமைக்காததால் ஆவேசம்

கோபி, பிப்.14- தார்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் ஆவேசமடைந்த பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தங்கமலை கரடு கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள், மாணவர்கள் அப்பகுதியிலுள்ள கீழ்பவானி கிளை வாய்க்கால் சாலை வேட்டைக்காரன் கோவில் வழியாக கோபிக்கு சென்று வருகின்றனர். தங்கமலை கரடு-லிருந்து வேட்டைக்காரன் கோவில் வரை உள்ள சாலை சிதலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை சீரமைக்கக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம், அமைச்சர், ஊரக வளர்ச்சித்துறை அதிகா ரிகள் ஆகியோரிடம் மனு அளித்து வந்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையை சீரமைக்கக்கோரி, கோபி - குன்னத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், இதுவரையில் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆவேமடைந்த அப்பகுதி மக்கள், சனியன்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்ய முயற்சி 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

ஈரோடு, பிப்.14- சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், எஸ்எம் நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (46). இவரது உறவினரான மது ரையை சேர்ந்த பாலன் என்ற பாலதண்டாயுதபாணி, பைனான்ஸ் தொழில் செய்வதற்காக ஈரோடு முத்தம்பாளை யத்தில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். பால தண்டாயுதபாணிக்கு சமையல் செய்வதற்காக அதே வீட்டில் செந்தில்குமார் தங்கியிருந்தார். அந்த வீட்டின் கீழ் தளத்தில் தங்கியிருந்த குடும்பத்தினருடன் செந்தில்குமார் பழகினார். அப்போது அவர்களது 15 வயதுடைய சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வாா்த்தை கூறியுள்ளார். இதைய டுத்து கடந்த 2020 ஆம் ஆண்டு செப்.19 ஆம் தேதி சிறுமியை, செந்தில்குமார் மதுரைக்கு கடத்திச் சென்று தங்கும் விடுதி யில் அடைத்துவைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். ஆனால், சிறுமி தடுத்ததை தொடர்ந்து, அவரை ஈரோட்டிற்கு அழைத்து வந்தார். இதனிடையே மகளை காணவில்லை என சிறுமியின் பெற்றோர், ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி ஈரோடு பேருந்து நிலையத்தில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று, சிறுமியையும், கடத்திச் சென்ற செந்தில்குமாரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை செந்தில்குமார் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, செந்தில்குமார் மீது போக்சோ மற்றும் கடத்தல் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத் தனர். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் இறுதி விசா ரணை முடித்து வெள்ளியன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற செந்தில் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சிறுமியை கடத்தி சென்ற குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை யும், அபராதமாக ரூ.10 ஆயிரமும், அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண் டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீா்ப்பளிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சத்தை நிவாரணத் தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பேராயர் பலி

ஈரோடு, பிப்.14- ஈரோட்டில் வசித்து வந்த கிறிஸ்தவ பேராயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் (56) வழக்கம் போல் சனியன்று அதிகாலை நடைபயிற்சி மேற்கொண் டார். அரசு மருத்துவமனை அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது, மீனாட்சி சுந்தரனார் சாலையில் விழுந்தார். இத னால் அதிர்ச்சியடைந்த அவ ரது ஓட்டுநர் அக்கம்பக்கத்தி னர் உதவியுடன், அருகிலி ருந்த அரசு மருத்துவமனை யில் சேர்த்தார். அங்கு பரி சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

காழ்ப்புணர்ச்சியால் பண்ணைக்கு சீல்: ஆட்சியரிடம் முறையீடு

ஈரோடு, பிப்.14- தாட்கோ கடன் பெற்று பன்றி வளர்ப் பில் ஈடுபட்டவரின் பன்றிகளை பறி முதல் செய்து பண்ணைக்கு சலங்க பாளையம் பேரூராட்சி நிர்வாகம் சீல் வைத்ததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பட்டியலினத்தவர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பூபால குமார் (பட்டியலினத்தை சேர்ந்தவர்) என்பவர், தாட்கோவில் கடன் பெற்று சலங்கபாளையம் பேரூராட்சி பகுதி யில் தனக்கு சொந்தமான இடத்தில் பண்ணை அமைத்து வெண்பன்றி வளர்ப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவ் வாறு சுமார் ரூ.5 லட்சம் செலவு செய்து ரூ.6 லட்சம் கடன் பெற்று தொழில் செய்து வந்த நிலையில், மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் 50 மாதங்களில் வங்கிக்கு கடன் தொகையை திருப்பிச் செலுத்தி வந்தார். இந்நிலையில், அருகில் உள்ள தோட்டத்துக்காரர் சுப்பிரமணி என்பவர் காழ்ப்புணர்ச்சியுடன் பொய் புகார் கொடுத்துள்ளார். ஆதிக்க சக்திகளின் தூண்டுதலால் பேரூராட்சி நிர்வாகம் 3 நாள் கெடுவில் பன்றிகளை பறி முதல் செய்து பண்ணைக்கு சீல் வைத் தது. யாருக்கும் இடையூறு இல்லாமல் தொழில் செய்து வந்த நிலையில் சாதிய காழ்ப்புணர்ச்சியுடன் பன்றிகளை பறி முதல் செய்து சீல் வைத்துள்ளனர் என பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டுகிறார். சுமார் ரூ.16 லட்சம் கடனாளியாக உள் ளேன். மீண்டும் பன்றி வளர்ப்பில் அதே பண்ணையில் ஈடுபட்டால் மட்டுமே கட னிலிருந்து மீள முடியும். 80 வயதடைந்த தந்தை, மாற்றுத்திறனாளியான மனைவி, கல்லூரியில் படித்து வரும் மகன் ஆகியோரை உள்ளிடக்கியது எனது குடும்பமாகும். வேறு தொழில் தெரியாத நிலையில், பண்ணை அமைத்து வளர்த்து வந்த சொந்த இடத்தில் மீண் டும் அனுமதி வழங்கினால் மட்டுமே கடனிலிருந்து மீள முடியும். தனது வறிய நிலையை கருத்தில் கொண்டு பன்றி வளர்ப்பிற்கு அனுமதி வழங்குமாறு ஆட்சியரிடம் மனு கொடுத்தார். பூபால குமார் மனு அளிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் என்.பாலசுப்பிரமணி உட னிருந்தார்.

750 ஆண்டுகால தமிழனின் பொறியியல் அதிசயம் காலிங்கராயன் தொட்டிப்பாலத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

ஈரோடு, பிப். 14- கல்லனைக்கு ஈடான காலிங்கராயன் தொட்டிப்பா லத்தை பாதுகாக்க வேண்டும் என பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு என்றாலே நம் நினைவுக்கு வருவது பசுமை மாறாத வயல்வெளிகள். இந்த பசுமைக்கு உயிர் கொடுத்தவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காலிங்கரா யன். சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பே, பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டி, 91 கிலோமீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் அமைத்த அவரது பொறியியல் அறிவு, இன்றும் உலகையே வியக்க வைக்கிறது. இன்று ‘நதிகள் இணைப்பு’ பற்றிப் பேசுகிறோம். ஆனால், அன்றே பவானி, நொய்யல், அமராவதி மற்றும் காவேரி ஆகிய நான்கு நதிகளையும் இணைக்கும் வகை யில் இந்த வாய்க்காலை வடிவமைத்தார் காலிங்கராயன். இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், எந்த மோட்டாரும் இல்லாமல், இயற்கையான சரிவை (Slope) மட்டுமே பயன்படுத்தி, தண்ணீரை ஒரு நதியிலிருந்து இன் னொரு நதிக்குக் கொண்டு சென்றார். இதற்குச் சான்றாக இன்றும் கல்லணையும், காலிங்கராயன் கால்வாயும் கம்பீ ரமாக நிற்கின்றன. காலிங்கராயன் கால்வாயின் 14-வது மைலில் ஒரு விசித் திரம் நடக்கிறது. அங்கே ‘பெரும்பள்ளம் ஓடை’ என்ற சிறிய ஓடை குறுக்கே ஓடுகிறது. கீழே ஓடை தண்ணீர் ஓட, அதன் மேலே கால்வாய் தண்ணீர் ஓட வேண்டும். இதற்காகக் காலிங்கராயன் ஒரு கல் பாலத்தைக் கட்டினார். பெரிய கருங்கற்களைக் கொண்டு, 11 வரிசைத் தூண்களுடனும், 12 கண்களுடனும் இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பாலங்களுக்குப் பக்கவாட்டுச் சுவர்கள் இருக் கும். ஆனால், இந்தப் பாலம் எந்தச் சுவரும் இல்லாமல், தண் ணீரை தாங்கிப் பிடிக்கும் ஒரு ‘தொட்டி’ போலச் செயல் படுகிறது. 750 ஆண்டுகளாகியும், ஒரு சிறு விரிசல் கூட இல்லாமல் இன்றும் தண்ணீர் இதில் தடையின்றிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. இது தமிழனின் அசாத்தியமான கட்டிடக் கலைக்கு ஒரு நேரடிச் சான்று. தற்போது இந்தப் பழமை வாய்ந்த பாலத்தை இடித்து விட்டு, புதிய பாலம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அப்பகுதி விவ சாயிகள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லணைக்கு இணை யாக தமிழனின் நீர் மேலாண்மைக்கு சான்றாக இருக்கும் ஒரே கட்டுமானம் இது. நவீன பொறியியல் மாணவர்க ளுக்கு ‘இயற்கை வழி நீர் மேலாண்மை’ குறித்த பாடம் இது. 750 ஆண்டுகள் தாங்கிய இந்தப் பாலம், நவீன காங்கிரீட் பாலங்களை விட வலிமையானது. “பழமையை போற்றுவோம், புதுமையைப் படைப்போம்” என்ற நோக் கில், இந்தப் பாலத்தை இடிக்காமல், இதனை ஒரு புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் எனப் பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கும், தொல்லியல் துறைக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவிநாசி அருகே பயங்கர சத்தம் போலீசார் விசாரணை

அவிநாசி,பிப்.14- அவிநாசி ஒன்றியம் சேவூர் செல்லும் சாலையில், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், இ சேவை மையம், சிறைச்சாலை, கருவூலம், கதர் கடை உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலை யில், சிவில் நீதிமன்றத்தில் தேவையில்லாத ஆவணங்களை ஒரு வார காலமாக அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந் துள்ளனர். இந்நிலையில் சனியன்று ஆவணங்களுக்கு தீ வைத்துள்ளனர். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டுள் ளது. சுமார் 500 மீட்டருக்கு சத்தம் கேட்டுள்ளது. மேலும், காம்ப வுண்ட் சுவர் சிறிது சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் தொல்லியல் எச்சங்கள்

கருத்தரங்கு திருப்பூர், பிப்.14 - திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, தொல்லியல் மரபு மன்றம் சார்பாக வெள்ளியன்று கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில் மன்ற துணைத்தலைவர் பேராசிரியர் சங்க மேஸ்வரன் வரவேற்றார். கல்லூரி முதல்வர், மன்றத்தின் தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி புகைப்படக் கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரை யாற்றினார். அவர் பேசுகையில், தொல்லியலின் சிறப்பையும், சங்க இலக்கியங்கள் தமிழர் பண்பாட்டின் வரலாற்று ஆதாரங்க ளாக விளங்குகின்றன. கொடுமணலுக்கும், கீழடிக்கும் இடை யேயுள்ள தொடர்பு, கொங்கு நாட்டின் வணிகப் பெருவழி கள் மூலம் ரோம் நாட்டுடன் தமிழர்கள் கொண்டிருந்த வாணிப தொடர்பை விளக்கி கூறினார். உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயல்பாட்டா ளர் அருட்செல்வன் தென் கொங்கு நாட்டின் தொல்லியல் எச் சங்களை எடுத்துரைக்கும் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தார். பிறகு வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியாக பேராசிரி யர் குருசந்திர பத்மன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் பேராசி ரியர் சக்தி செல்வம் உட்பட ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு

திருப்பூர், பிப்.14- திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று கோட்டாட்சியர் சிவப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் 122 பேர் பங்கேற்றனர். திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான வருடாந்திர பொது இடமாறு தல் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், திருப்பூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம் அவிநாசி, ஊத்துக்குளி உள்ளிட்ட பகுதிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பவும், பணி மூப்பு அடிப்படையில் இட மாறுதல் வழங்கவும் இந்த கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இந்நிகழ்வில், 122 கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏ பிரிவு கிராமங்களில் பணிபுரிய 25 அலுவலர்கள் விண்ணப்பித்து இருந்ததாகவும், பணி மூப்பு அடிப்படையில் தகுதியானவர்களுக்கு முன்னுரிமை அளிக் கப்பட்டு இடங்கள் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வில், பல மாதங்களாக ஒரே இடத்தில் பணி யாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

வெள்ளக்கோவிலில் புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவோர் குறித்த கணக்கெடுப்பு

திருப்பூர், பிப்.14- புகையிலைப் பொருள்கள் பயன்படுத்துவோர் குறித்த கணக்கெடுப்பு வெள்ளியன்று வெள்ளக்கோவில் பகுதியில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட புகையிலைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு, வெள்ளக்கோவில் நகராட்சி, வெள்ளக்கோவில் சமு தாய சுகாதார நிலையம் சார்பில், திருவள்ளுவர் நகர் பகு தியில் அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வீட்டில் பீடி, சிகரெட், குட்கா, போதைப் பாக்குகள் போன்றவற்றை பயன் படுத்துகிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு கள் உள்ளிட்டவற்றை விளக்கி, அவற்றைப் பயன்படுத்தும் குடும்ப உறுப்பினரை அந்தப் பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும், கல்வி நிலையங்க ளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரி மையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

துன்பத்தில் வாடும் முதியோர்களுக்கு மாற்றம் வருமா?

உடுமலை, பிப்.14 - உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொருட்கள் மற்றும் முதியோர் உதவித் தொகை வாங்க கை ரேகை பதிவு செய்ய முடி யாத நிலை பல மாதங்களாகத் தொடர்கி றது. இதுகுறித்து பலமுறை புகார் அளித் தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது என முதியோர்கள் வேதனையு டன் தெரிவிக்கின்றனர். தற்போது அனைத்து துறைகளி லும் ஆன்லைன் மூலம் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நன்மை ஏற்பட்டாலும், பல வகையில் பொது மக்கள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக முதியவர் களுக்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. நியாய விலை கடைகளில் பொருட்கள் விநியோகம் முழுமையாக ஆன்லைன் செய்யப்பட்டுள்ளது. இதனால் கைரேகை வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில், முதியவர்க ளுக்கு கைரேகை பதிவாவதில் சிக்கல் உள்ளது. கண் விழிகள் சென்சார் மூலம் பதிவு செய்து பொருட்களை பெறலாம் என்றால், கண் விழிகள் பதியும் இயந்தி ரம் பழுதாகி உள்ளது என பல மாதங் கள் கடை ஊழியர்கள் கூறுவதாக உடு மலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட் டார பகுதி மக்கள் வேதனையுடன் தெரி விக்கின்றனர். ஏற்கனவே பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசுத் தொகை பெறும்போது இதே சிக்கல் நிலவி யது. இதுகுறித்து ஆங்காங்கே பலர் புகார் அளித்தனர். அதேபோல் முதியோர் உதவித் தொகை முன்பு போஸ்ட் மேன் மூலம் வழங்கப்பட்டது. தற்போது முழுமை யாக வங்கிகள் மூலம் வழங்கப்படுவ தால், முதியவர்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாமல், பணத்தை பெற முடி யாத நிலையில் உள்ளனர். மேலும், கிரா மங்களில் இருப்பவர்கள் உதவித் தொகை வாங்க தனியாக வாகனம் மூலம் செல்ல வேண்டிய நிலை ஏற்படு கிறது. வயதானவர்களுக்கு வாழ்வாதா ரத்திற்காக தரப்படும் உதவி தொகையை கூட பெற முடியாமல் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். எனவே முதியவர்கள் நியாய விலைக் கடை பொருட்கள் வாங்க எளிமையான முறையை நடைமுறைப்படுத்த வேண் டும். உதவித் தொகையை வீடுகளுக்கு நேரில் சென்று தர வேண்டும் என எதிர் பார்க்கின்றனர்.

போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள்: பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

திருப்பூர், பிப்.14- திருப்பூர் மாநகர காவல்துறை சார்பில் போதைப் பொருட் களால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வெள்ளியன்று எம தர்மன் மற்றும் சித்திரகுப்தன் வேடமடைந்து விழிப்புணர்வு நாடகம் போடப்பட்டது. போதைப் பொருட்கள் இல்லாத தமிழகமாக மாற்று வதற்கு தமிழக அரசின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியான நல்லூர் காவல் சரகத்தின் சார்பில் போதைப் பொருட்களினால் ஏற்படும் பின் விளைவு கள் குறித்து விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி தாராபுரம் சாலை யில் உள்ள கோவில் வழி பேருந்து நிலையம் முன்பு நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் போதை பொருட்களால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும், பெண்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் ஈரோடு மரபு நாடக குழுவினர் எமதர்மன் மற்றும் சித்திரகுப்தர் வேடமனிந்து நூதன முறையில் பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர்.

துன்பத்தில் வாடும் முதியோர்களுக்கு மாற்றம் வருமா?

உடுமலை, பிப்.14 - உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் பொருட்கள் மற்றும் முதியோர் உதவித் தொகை வாங்க கை ரேகை பதிவு செய்ய முடி யாத நிலை பல மாதங்களாகத் தொடர்கி றது. இதுகுறித்து பலமுறை புகார் அளித் தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது என முதியோர்கள் வேதனையு டன் தெரிவிக்கின்றனர். தற்போது அனைத்து துறைகளி லும் ஆன்லைன் மூலம் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் நன்மை ஏற்பட்டாலும், பல வகையில் பொது மக்கள் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக முதியவர் களுக்கு பாதிப்பு அதிகளவில் உள்ளது. நியாய விலை கடைகளில் பொருட்கள் விநியோகம் முழுமையாக ஆன்லைன் செய்யப்பட்டுள்ளது. இதனால் கைரேகை வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்நிலையில், முதியவர்க ளுக்கு கைரேகை பதிவாவதில் சிக்கல் உள்ளது. கண் விழிகள் சென்சார் மூலம் பதிவு செய்து பொருட்களை பெறலாம் என்றால், கண் விழிகள் பதியும் இயந்தி ரம் பழுதாகி உள்ளது என பல மாதங் கள் கடை ஊழியர்கள் கூறுவதாக உடு மலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட் டார பகுதி மக்கள் வேதனையுடன் தெரி விக்கின்றனர். ஏற்கனவே பொங்கல் பொருட்கள் மற்றும் பரிசுத் தொகை பெறும்போது இதே சிக்கல் நிலவி யது. இதுகுறித்து ஆங்காங்கே பலர் புகார் அளித்தனர். அதேபோல் முதியோர் உதவித் தொகை முன்பு போஸ்ட் மேன் மூலம் வழங்கப்பட்டது. தற்போது முழுமை யாக வங்கிகள் மூலம் வழங்கப்படுவ தால், முதியவர்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாமல், பணத்தை பெற முடி யாத நிலையில் உள்ளனர். மேலும், கிரா மங்களில் இருப்பவர்கள் உதவித் தொகை வாங்க தனியாக வாகனம் மூலம் செல்ல வேண்டிய நிலை ஏற்படு கிறது. வயதானவர்களுக்கு வாழ்வாதா ரத்திற்காக தரப்படும் உதவி தொகையை கூட பெற முடியாமல் கடும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர். எனவே முதியவர்கள் நியாய விலைக் கடை பொருட்கள் வாங்க எளிமையான முறையை நடைமுறைப்படுத்த வேண் டும். உதவித் தொகையை வீடுகளுக்கு நேரில் சென்று தர வேண்டும் என எதிர் பார்க்கின்றனர்.