முந்தய பக்கம்

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரிக்கை

16 Jul 2026, 9:56 pm
அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரிக்கை
<p><strong>அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க கோரிக்கை</strong></p><p>கரூர், ஜூலை 16 - அங்கன்வாடி திட்டத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும்போது கடைசி மாத ஊதியத்தில் பாதியை அகவிலைப்படியுடன் கூடிய பென்சன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க கரூர் மாவட்டக் குழு சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.சாந்தி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ஜீவானந்தம், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநிலச் செயலாளர் தேவமணி, சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சுப்பிரமணியன், தள்ளுவண்டி தரக்கடை தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.தண்டபாணி, கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் ப.சரவணன், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்டத் தலைவர் வாசுகி, மாவட்ட பொருளாளர் செவ்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram