தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு ஊழியர்களாக அறிவித்திடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் - கைது

6 Jan 2026, 4:23 pm
அரசு ஊழியர்களாக அறிவித்திடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் -  கைது
<p><strong>அரசு ஊழியர்களாக அறிவித்திடக்கோரி&nbsp;&nbsp;அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் - &nbsp;கைது</strong></p> <p>தருமபுரி, ஜன.6- அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வலி யுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங் கத்தினர் மாநிலம் தழுவிய மறியல் &nbsp;போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி னர். தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர் ஆக்க வேண்டும். நீதிமன்ற &nbsp;தீர்ப்பின் அடிப்படையில் பணி &nbsp;ஓய்வு பெறும் போது அங்கன்வாடி &nbsp;ஊழியர்களுக்கு பணிக்கொடை யாக ரூ.10 லட்சமும், உதவியாளர்க ளுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண் டும். பணி ஓய்வுக்குப் பிறகு குடும்ப &nbsp;ஓய்வூதியமாக ரூபாய் 9000 அக விலை படியுடன் வழங்க வேண்டும். &nbsp;காலிப் பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட &nbsp;பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் செவ்வாயன்று மாநிலம் தழுவிய மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக தருமபுரி &nbsp;மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு, சங்க மாவட்டத் தலைவர் &nbsp;என்.சுமதி தலைமை வகித்தார். செயலாளர் சி.கவிதா, பொருளா ளர் என்.தெய்வானை, மாநிலக்குழு &nbsp;உறுப்பினர் கண்மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். சிஐடியு மாவட்டத் தலைவர் சி. &nbsp;கலாவதி, மாவட்ட இணைச் செய லாளர் ஏ. சேகர், மாவட்டப் பொரு ளாளர் எஸ்.சண்முகம் ஆகியோர் வாழ்ததிப் பேசினர். மறியலில் ஈடு பட்டோரை போலீசார் கைது செய்த னர். &nbsp;நீலகிரி நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி &nbsp;அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சங்க மாவட்டத் &nbsp;தலைவர் கவிதா தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் சசிகலா, &nbsp;சிஐயுடி மாவட்ட துணைத் தலை வர்கள் சுந்தரம், சங்கரலிங்கம் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். ஈரோடு ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகம் அருகே நடைபெற்ற மறி யல் போராட்டத்திற்கு, சங்க மாவட் டத் தலைவர் ராதாமணி தலைமை வகித்தார். செயலாளர் சாந்தி, பொருளாளர் சுசீலா உள் ளிட்ட பெருந்திரளானோர் கலந்து &nbsp;கொண்டனர். &nbsp;தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் ச. விஜயமனோகரன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க செயலா ளர் மணிபாரதி மற்றும் சகோதர சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசி னர். போராட்டத்தில் ஈடுபட்ட 2000க் கும் மேற்பட்டோர் போலீசார் கைது &nbsp;செய்தனர். சேலம் சேலம் கோட்டை மைதானத் தில் நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு, சங்க மாவட்டச் செயலா ளர் வசந்தகுமாரி தலைமை வகித் தார். இதில், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே தியாக ராஜன், அங்கன்வாடி ஊழியர் சங்க &nbsp;மாவட்டத் தலைவர் உமா, மாநில &nbsp;செயற்குழு உறுப்பினர் உஷா, ஆட்டோ சங்க மாவட்டச் செயலா ளர் சி.உதயகுமார், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகி அருள் மொழி, சத்துணவு ஊழியர் சங்க &nbsp;செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட &nbsp;பலர் கலந்து கொண்டு கைதாகி னர். நாமக்கல் நாமக்கல் பூங்கா சாலையில் &nbsp;நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு, சங்க மாவட்டச் செயலாளர் பிரேமா, பொருளாளர் கலா ஆகி யோர் தலைமை தாங்கினர். போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச் சாமி பேசினார். இதில், சங்க நிர் வாகிகள் ஜெயமணி, பரமேஸ்வரி, &nbsp;அபி, பாலாமணி, சிவகாமி, சரஸ் வதி உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.