தனியார்மயத்திற்கு எதிராக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
10 Jul 2026, 9:05 pm
<p><strong>தனியார்மயத்திற்கு எதிராக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் </strong></p><p>திண்டுக்கல். ஜுலை 10 அங்கன்வாடி திட்டத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அனுஷ்டித்தி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளியன்று மாலையில் தலைமை தபால் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத்தலைவர் செல்வதனபாக்கியம் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் பத்மாவதி, மாவட்டப் பொருளா ளர் தமிழ்செல்வி, மாநிலக்குழு உறுப்பினர் பரிதாபேகம் ஆகியோர் பேசினர். சிஐடியு மாவட்டச்செயலாளர் சி.பி.ஜெயசீலன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ராஜ் ஆகியோர் ஆதரித்துப் பேசினர். இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.</p>
