மோடி அரசின் துரோகத்திற்கு எதிராக பொங்கி எழுந்த அங்கன்வாடி ஊழியர்கள்
1 hour before

மோடி அரசின் துரோகத்திற்கு எதிராக பொங்கி எழுந்த அங்கன்வாடி ஊழியர்கள்

புதுதில்லி, ஜூலை 12 - அங்கன்வாடி மையங்களைப் பலப்படுத்தத் தவறியதுடன், ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய மறுக்கும் ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து, ஜூலை 10 அன்று நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட ‘கருப்பு தின’ப் போராட்டம் மாபெரும் வெற்றி யடைந்துள்ளதாக அகில இந்திய அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்மேளனம் (சிஐடியு) அறிவித்துள்ளது. ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்ன பூர்ணா தேவி கடந்த ஓராண்டில் இருமுறை உறுதி யளித்தும், 2018 முதல் முடங்கியுள்ள ஊதியத்தை உயர்த்தவோ, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கிராஜுவிட்டி வழங்கவோ எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

ஐசிடிஎஸ் (ICDS) திட்டம் தொடங்கி 50 ஆண்டுகள் கடந்தும், அதனை நிரந்தரமாக்காமல் தொடர்ந்து பட்ஜெட்டில் நிதி வெட்டுக்களை மேற்கொண்டு வரும் மோடி அரசு, நாட்டின் குழந்தைகளின் ஊட்டச்சத்து நலனைப் படுகுழியில் தள்ளியுள்ளதாக சம்மேளனம் சாடியுள்ளது.

இந்தத் துரோகத்திற்கு எதிராக, அசாம், பீகார், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் மாவட்டத் தலைநகரங்களில் ஆயிரக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் கருப்பு உடை அணிந்தும், கருப்புக் கொடிகளை ஏந்தியும் வீதிகளில் இறங்கி ஆவேசப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் இணைந்து ஆஷா (ASHA) மற்றும் சத்துணவு ஊழியர் சம்மேளனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவாகத் திரண்டனர்.

இந்தியாவின் எதிர்காலமான குழந்தை களின் ஊட்டச்சத்தையும், அங்கன்வாடி உள்கட்ட மைப்பையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். எ

னவே, ஒன்றிய அரசு உடனடியாக ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பணி நிரந்தரம் மற்றும் முழுமையான சமூகப் பாதுகாப்பை வழங்க வேண்டும்; தவறினால் இப்போராட்டம் அகில இந்திய அளவில் மேலும் தீவிரமடையும் என சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் உஷா ராணி எச்சரித்துள்ளார்.