தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அங்கன்வாடி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மறியல் மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு

6 Jan 2026, 3:29 pm
அங்கன்வாடி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மறியல் மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு
<p><strong>அங்கன்வாடி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - மறியல் மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் பேர் பங்கேற்பு</strong></p> <p>சென்னை, ஜன. 6 - அரசு ஊழியர்களாக அறிவிக்கக் கோரி, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தி னர், செவ்வாயன்று (ஜன.6) வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தேர்தல் வாக்குறுதி 313-இன் படி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும்; பணி ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் &nbsp;பணிக்கொடை வழங்க வேண்டும். ஓய்வு பெற்றோருக்கு குடும்ப ஓய்வூதி யமாக 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் மே மாதம் முழுமையும் கோடை விடுமுறை வழங்க வேண்டும் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த &nbsp;போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர். எஸ். கண்ணன் இதன் ஒருபகுதியாக சென்னை கிண்டி அஞ்சலகம் முன்பு மறியல் நடை பெற்றது. போராட்டத்தை தொடங்கி வைத்து பேசிய சிஐடியு மாநிலப் பொதுச் &nbsp;செயலாளர் எஸ். கண்ணன், &ldquo;அரசு ஊழி யர்களுக்கு அறிவித்ததைப்போல அங்கன்வாடி ஊழியர்களுக்கும் கடைசி மாத ஊதியத்தில் பாதியை ஓய்வூதிய மாக வழங்க வேண்டும். அமைச்சர் ஒப்புக் கொண்டபடி ஒரு மாத கோடை விடு முறை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்&rdquo; என்றார். செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் எஸ். தேவமணி, மாநிலம் முழு வதும் நடைபெற்ற மறியலில் 40 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இனியும் அரசு &nbsp;காலம் தாழ்த்தாமல் சங்க நிர்வாகி களை அழைத்துப் பேசி கோரிக்கை களை நிறைவேற்றாவிடில் ஜனவரி 27 முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்&rdquo; என்றார். சென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீதேவி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநிலச் செயலா ளர் நிர்மலா, மாவட்டச் செயலாளர் சீதா, சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர் ஏ. முருகானந்தம், செயலா ளர் ஜி. செந்தில்குமார், சென்னை மாநக ராட்சி செங்கொடி சங்க மாவட்டத் தலைவர் ஜெ. பட்டாபி உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் இ. பாக்கியமேரி சிவகங்கையிலும், பொருளாளர் கே.சித்ரா திருப்பூரிலும் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.