தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அங்கன்வாடி ஊழியர்க்கு மே மாதம் முழுவதும் விடுமுறை

5 Feb 2026, 3:40 pm
அங்கன்வாடி ஊழியர்க்கு மே மாதம் முழுவதும் விடுமுறை
<p><strong>அங்கன்வாடி ஊழியர்க்கு மே மாதம் முழுவதும் விடுமுறை</strong></p> <p>சங்க பொதுச் செலாளர் தேவமணி வரவேற்பு சென்னை, பிப். 5 - அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் முழுமையும் கோடை விடு முறை வழங்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் வர வேற்றுள்ளது. அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஒரு மாதம் முழுமையும் கோடை விடுமுறை வழங்கக் கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கம் தொடர் காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட தொடர் இயக்கங்களை நடத்தி வந்தது. &nbsp;இதுதொடர்பாக அமைச்சர், துறைச் செயலாளர் ஆகியோர் பல &nbsp;கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், மே மாதம் முழு மைக்கும் கோடை விடுமுறை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித் துள்ளது. இந்த ஆணையை அமைச்சர் கீதாஜீவன், சங்கத்தின் தலைவர் பாக்கியமேரி, பொதுச் செயலாளர் தேவமணி, பொருளாளர் சித்ரா, தமிழ்நாடு அனைத்து சத்து ணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதி யர் சங்க நிர்வாகிகள் சுந்தராம்பாள், சித்திரை செல்வி ஆகியோரிடம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய தேவமணி, &ldquo;கோடை வெப்பத்தின் தாக்கத்தி லிருந்து குழந்தைகளையும், ஊழியர்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் மே 1 முதல் 31 வரை ஒரு மாதத்திற்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனை வரவேற்கிறோம். &nbsp;அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் குறு அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு இடையே அவரவர் நேரடி நியமனம் மூலம் பணியில் சேர்ந்த நாளினை அடிப்படையாகக் கொண்டு முதுநிலைப் பட்டியல் வெளியிடவும் அரசு ஆணை வெளியிடப்பட்டு உள்ளதையும் வரவேற்கிறோம். எங்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து இந்த அரசாணைகளை வழங்கிய முதலமைச்சருக்கும், துறை அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். &nbsp;அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு, ஏப்ரல் மாதம் இறுதியில் ஒரு மாதத்திற்கு தேவையான சத்துமாவு வீட்டிற்கு சென்று வழங்கப்படும்&rdquo; என்றார். சிபிஎம் முயற்சி &nbsp;கோடை விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் அங்கன்வாடி ஊழியர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டுமென்று ஜனவரி 13 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நேரில் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.