முந்தய பக்கம்

யூடியூபர் மீது நடவடிக்கை கோரி திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு

14 Jul 2026, 1:36 am
யூடியூபர் மீது நடவடிக்கை கோரி திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு
<p><strong>யூடியூபர் மீது நடவடிக்கை கோரி திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 13- அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களைத் தரக்குறைவாகவும் அவதூறாகவும் பேசிய யூடியூபர் கௌசல்யா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.</p><p>இந்த மனு அளிக்கும் நிகழ்வில், சங்கத்தின் நிர்வாகிகள் ஆர்.பிரியா, யூ.வெண்மதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர். அங்கன்வாடி ஊழியர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram