தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் விரைவு செய்திகள்

24 Jan 2026, 3:38 pm
தீக்கதிர் விரைவு செய்திகள்

ஓய்வூதிய உயர்வு அறிவிப்புக்கு அங்கன்வாடி ஊழியர் சங்கம் வரவேற்பு

சென்னை, ஜன. 24 - தமிழ்நாடு அரசின் ஓய்வூ திய உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவி யாளர் சங்கம் வரவேற்று உள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் தலைவர் இ.  பாக்கியமேரி, பொதுச்செய லாளர் எஸ். தேவமணி ஆகி யோர் அறிக்கையில் கூறி யிருப்பதாவது: ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஜனவரி 27 முதல் தொடர் வேலை நிறுத்த அறிவிப்பு செய்திருந்தோம். இந்நி லையில், அங்கன்வாடி ஊழி யர்களுக்கு ஓய்வூதியத்தை 3 ஆயிரத்து 400 ரூபாயாக  உயர்த்தியும், ஓய்வின்போது வழங்கப்படும் மொத்தத் தொகையை 2 லட்சம்  ரூபாயாக உயர்த்தியும் தமி ழக அரசு அறிவித்துள்ளது.   அதேபோல உதவி யாளர்களுக்கு ஓய்வூதி யத்தை 1400 ரூபாயாகவும், மொத்தத் தொகையை ஒரு  லட்சம் ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது. குறு மையத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்  மற்றும் உதவியாளர்களுக் கும் குடும்ப ஓய்வூதியம் அறி விக்கப்பட்டிருப்பது போ ராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். பேச்சுவார்த்தையில் காலமுறை ஊதியமும், ஓய்வூதியமாக 9 ஆயி ரம் ரூபாயும், பணிக்கொடை யாக ஊழியர்களுக்கு 10  லட்சம், உதவியாளர் களுக்கு ரூ. 5 லட்சம் கோரி யிருந்தோம். இதனை பரி சீலிக்காதது வருத்தமளிக் கிறது. எனவே, கோரிக்கை களை அரசு முழுமையாக பரி சீலிக்க வேண்டும். குறைந்த  பட்ச ஊதியம் மற்றும்  மே மாதம் முழுவதுமான விடுப்பு ஆகியவை பட் ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். ஜனவரி 27 ஜனவரி போ ராட்டம் குறித்து சங்கத்தின்  மாநிலக் குழுவில் விவா தித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

ஊரக வேலை உறுதிச் சட்டத்தைப் பாதுகாக்கத் தனித் தீர்மானம்  தமிழக அரசுக்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் பாராட்டு!

சென்னை, ஜன.24 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புச் சட்டத்தின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் (விதொச) வரவேற்றுள்ளது. தீர்மானத்தின் பின்னணி ஒன்றிய பாஜக அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதன் பெயர் மற்றும் விதிகளை மாற்றி ‘விபிஜி ராம்ஜி’ (VPG RAMJI) எனும் புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தி, பழைய சட்டமே தொடர வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் மா.சின்னதுரை எம்.எல்.ஏ மற்றும் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “பாஜக அரசு கார்ப்பரேட் விசுவாசத்துடன் ஏழைகளின் வேலைக்கான சட்டத்தைப் பறிக்கிறது. கிராம சபைகளின் அதிகாரத்தைப் பிடுங்கி, கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைக்கும் இந்த ஜனநாயக விரோதச் செயல் கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளனர். நம்பிக்கை அளிக்கும் தீர்மானம் புதிய திட்டத்தைக் கைவிட்டு, வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக்கூலியை 700 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் எனச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இத்திட்டத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசின் முயற்சிக்கு எதிராகச் சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த மார்க்சிஸ்ட் கட்சியின் நாகை மாலி மற்றும் மா.சின்னதுரை ஆகியோருக்கு சங்கம் நன்றிகளைத் தெரிவித்துள்ளது. வேலைக்கான சட்ட அந்தஸ்தைத் தக்கவைக்கத் தமிழக அரசு எடுத்துள்ள இந்தச் சீரிய முயற்சி, ஊரகத் தொழிலாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.