முந்தய பக்கம்

ஓய்வூதியர் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

4 Jul 2026, 4:17 am
ஓய்வூதியர் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு
<p><strong>ஓய்வூதியர் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு</strong></p><p>சென்னை, ஜூலை 3 – சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க காத்தி ருப்பு போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ஓய்வூ தியத்தை உயர்த்தி கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஓய்வூதிய உயர்வு மற்றும் நிலுவை தொகை வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜூலை 7 முதல் சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி இயக்க இயக்குநர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் அறிவித்தது. இதனையொட்டி சங்கத் தலைவர்கள் கே.பழனிசாமி, பி.இராமமூர்த்தி உள்ளிட் டோருடன் வியாழனன்று (ஜூலை 2) இயக்குநர் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, ஓய்வூதிய உயர்வு மற்றும் நிலுவை தொகை வழங்க உடனடி யாக மாவட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்படும் என்று இயக்குநர் உறுதியளித்தார். இதனையேற்று காத்தி ருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக சங்கத் தலைவர்கள் தெரி வித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram