பதவி உயர்வு வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
17 Dec 2025, 4:11 pm
<p><strong>பதவி உயர்வு வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>திருப்பூர், டிச.17- அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சத்து ணவு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற் றும் உதவியாளர் சங்கத்தினர் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். அமைப்பின் மாவட்ட துணைத் தலைவர் வெண்ணிலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 1993 ல் பணியில் சேர்ந்து, பதவி உயர்வு பட்டியலில் கடந்த மூன்று ஆண்டுகளாக தகுதி ஆய்வு பட்டி யல் வெளியிடப்பட்டும் பதவி உயர்வு வழங் கப்படவில்லை. இந்நிலையில் தற்போது மேற்பார்வையாளர் நிலை ஒன்று, மேற்பார் வையாளர் நிலை இரண்டு ஆகிய காலிபணி யிடங்களில் 30 சதவீதம் நேரடி நியமனத்திற் காக நிறுத்தி வைத்துவிட்டு, மீதி இடங்க ளையே அங்கன்வாடி ஊழியர்களையும், சத் துணவு ஊழியர்களையும் நிரப்ப போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங் கன்வாடி ஊழியர்களின் பதவி உயர்வு நிரந் தரமாக பறிக்கப்படும் அபாய நிலை உருவா கியுள்ளது என தெரிவித்தனர். மேலும், அங் கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பி னர். இதில் மாநிலப்பொருளாளர் கே.சித்ரா, மாவட்டச் செயலாளர் டி.சித்ரா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப்பேசினார். முடி வில் மாவட்டப்பொருளாளர் கே.பேபி நன்றி கூறினார். அதேபோல் உடுமலை, பல்லடம், அவிநாசி, குடிமங்கலம் ஆகிய பகுதிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
