பணி நிரந்தரம் செய்யக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
30 Dec 2025, 4:07 pm
<p><strong>பணி நிரந்தரம் செய்யக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>இராஜபாளையம், டிச.30- அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.28 ஆயிரம் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு முழுவதும் செவ்வா யன்று அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனொரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் விமலா ராணி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட உதவி தலைவர் ஜி.கணேசன், சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சோம சுந்தரம், இராஜபாளையம் கிளைத் தலை வர் கவிதா, பொருளாளர் சத்யா ஆகியோர் விளக்கிப் பேசினர். ஜனவரி 6ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஊராட்சி ஒன்றியத்திலும் கோரிக்கையை விளக்கி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாடானையில் வட்டாரத் தலைவர் டி.சுசி தலைமையில் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் எஸ்.ரேகா வர வேற்புரை ஆற்றினார். மாவட்ட பொருளா ளர் ஆர்.பாலயோகினி வாழ்த்திப் பேசினார். ஆர்.எஸ்.மங்கலத்தில் வட்டாரத் தலை வர் கீதா தலைமையில் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் மோகனா வரவேற் புரை ஆற்றினார். மாநில நிர்வாகி செல்வி வாழ்த்திப் பேசினார். பரமக்குடியில் வட்டாரத் தலைவர் தேவி தலைமையில் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் பிரதீபா வரவேற்புரையாற்றி னார். மாவட்ட நிர்வாகி சியாமளா வாழ்த்திப் பேசினார். இராமநாதபுரத்தில் வட்டார தலைவர் கிருஷ்ணவேணி தலைமையில் நடை பெற்றது. வட்டாரப் பொருளாளர் ராதிகா வரவேற்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகி மாலதி வாழ்த்திப் பேசினார். போகலூரில் வட்டாரத் தலைவர் விஜய பாலா தலைமை வகித்தார். வட்டாரச் செய லாளர் சூரிய பிரபா வரவேற்புரையாற்றி னார். மாவட்ட நிர்வாகி ஜெயவல்லி வாழ்த்திப் பேசினார். கமுதியில் வட்டாரத் தலைவர் சுப்பு லட்சுமி தலைமை வகித்தார். வட்டாரச் செய லாளர் உஷா வரவேற்றார். மாவட்ட நிர்வாகி இருளவேணி வாழ்த்திப் பேசினார். கடலாடியில் வட்டார தலைவர் எஸ். நகோமி தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் என்.நாகராணி வரவேற்புரை யாற்றினார். மாவட்ட நிர்வாகி எம்.முத்து வேல் வாழ்த்திப் பேசினார். மண்டபத்தில் வட்டாரத் தலைவர் ஜெய வேணி தலைமை வகித்தார். வட்டாரச் செய லாளர் ஜான்சி ராணி வரவேற்றார். மாநிலச் செயலாளர் மல்லிகா வாழ்த்தி பேசினார். நயினார்கோவிலில் வட்டாரத் தலைவர் தெய்வானை தலைமையில் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் ரமேஷ் குமாரி வர வேற்றார். மாவட்ட துணை தலைவர் ரீட்டா வாழ்த்திப் பேசினார். திருப்புல்லாணியில் வட்டார தலைவர் பாகம்பிரியா தலைமையில் நடைபெற்றது. வட்டாரச் செயலாளர் சரண்யா வரவேற் றார். மாவட்ட துணைத் தலைவர் உமா வாழ்த்திப் பேசினார்.</p>
