முந்தய பக்கம்

ஆண்டிபட்டி தோழர் மா.கணேசன் காலமானார்

16 May 2026, 11:19 pm
ஆண்டிபட்டி தோழர் மா.கணேசன் காலமானார்
<p><strong>ஆண்டிபட்டி தோழர் மா.கணேசன் காலமானார் </strong></p><p>தேனி, மே 16- சிஐடியு கைத்தறி தொழிலாளர் சங்க தேனி மாவட்டத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆண்டிபட்டி ஒன்றிய குழு முன் னாள் உறுப்பினருமான தோழர் மா. கணேசன் (70) வெள்ளிக்கிழமை இரவு காலமானார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி ஆண்டிபட்டியில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அன்னாரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் எம்.இராமச்சந்திரன், மூத்த தலை வர் கே.ராஜப்பன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி. வெங்கடேசன், டி.கண்ணன், சு.வெண்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் என்.முத்துரத்தினம், சிஐடியு மாவட்டத் தலைவர் ஜெயபாண்டி, மாவட்டச் செயலாளர் ஜி. சண்முகம், கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் பி. பிச்சைமணி, ஆண்டிபட்டி தாலுகா செயலாளர் பொறுப்பு எஸ்.மீனாட்சிசுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.கே.முருகன், எஸ்.மாரிமுத்து, கோதண்டராமன், ஜெயராமன் உள்ளிட்ட தலைவர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். </p>
Share
FacebookXWhatsAppTelegram