ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிரட்டும் வெப்ப அலை 100-ஐ நெருங்கும் உயிரிழப்பு
24 May 2026, 8:29 pm

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மிரட்டும் வெப்ப அலை 100-ஐ நெருங்கும் உயிரிழப்பு

ஆந்திர, தெலுங்கானா மாநி லங்களில் முன்னெப்போ தும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இருமாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் பாலை வனத்தைப் போல் 42 முதல் 46 டிகிரி செல்ஸியஸிற்கும் அதிகமான அளவில் வெயில் கொளுத்தி வரு கிறது.

இதனால் ஆந்திரா, தெலுங் கானா மாநிலங்களில் ‘ஹீட் ஸ்ட்ரோக்கால் (இயற்கையான வியர்வை சுரப்பு மண்டலம் செய லிழக்கும்)’ உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள் ளதாக செய்திகள் வெளியாகியுகி யுள்ளன. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் சனியன்று இரவு நேர நிலவரப்படி 60 பேர் ஹீட் ஸ்ட்ரோக்கால் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக ஆந்திர மாநி லத்தின் விஜயவாடாவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏலூரு, மேற்கு கோதாவரி, காக்கி நாடா ஆகிய இடங்களிலும் உயிரி ழப்புகள் அதிகமாக பதிவாகி யுள்ளன. தெலுங்கானாவில் வாரங் கல், நல்கொண்டா, கம்மம், கரீம் நகர் ஆகிய மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந் துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலித் தொழிலாளர்கள், வீடற்றவர்கள், நேரடியாகச் சூரிய ஒளியில் வேலை செய்த முதியவர்கள் என்று கூறப்படுகிறது. எனினும் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை முழு மையாக கணக்கிடப்படவில்லை என்றும், சிலர் மருத்துவமனையில் காரணமின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 100-ஐ தாண்ட லாம் என செய்திகள் வெளியாகி யுள்ளன.

200 வௌவால்கள் உயிரிழப்பு

ஆந்திரா, தெலுங்கானா மட்டு மின்றி தில்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தி யப்பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட வடமாநி லங்களிலும் வெப்ப அலைக்கு நிகராக வெயில் கொளுத்தி வரு கிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெப்ப அலையால் 200 வௌவால்கள் இறந்து கிடப்பது கண்டறியப் பட்டுள்ளது. பாலி நகர் பஞ்சா யத்தின் நௌகோனியா குளக் கரையில் உள்ள மரங்களில் ஆயி ரக்கணக்கான வௌவால்கள் தஞ்சமடைந்திருந்தன. சனிக்கிழ மையன்று, பெருமளவிலான வௌவால்கள் தரையில் இறந்து கிடந்தன. இதனைத் தொடர்ந்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வெப்ப அலைத் தாக்கத்தால் 200 வௌவால்கள் இறந்துள்ளன என அறிவித்து, வௌவால்களின் உடலை கைப்பற்றிச் சென்றனர்.