தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆந்திரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகராட்சி, நகராட்சி என 6 வார்டுகளில் வெற்றி

5 Nov 2026, 9:32 pm
ஆந்திரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகராட்சி, நகராட்சி என 6 வார்டுகளில் வெற்றி

ஆந்திரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகராட்சி, நகராட்சி என 6 வார்டுகளில் வெற்றி

விஜயவாடாஆந்திரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தெலுங்குதேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணியின் வன்முறை அரசியல், பணப்பட்டுவாடா, வாக்குச் சாவடிகளை கைப்பற்றுதல் உள்ளிட்ட அடாவடி சம்பவங்களை திடமாக எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகராட்சி,நகராட்சி என 6 வார்டுகளில் அபார வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, கிரேட்டர் விசாகப்பட்டினம் மாநகராட்சியின் 105ஆவது வார்டிலும் (எம்.கிருஷ்ணய்யா), விஜயவாடா மாநகராட்சியின் 52 வார்டிலும் (சத்ய பாபு), ஆதோனி நகராட்சியின் 19ஆவது வார்டிலும் (லட்சுமணன்), ஆத்மகூர் நகராட்சியில் 21 (சத்வதி) மற்றும் 23ஆவது வார்டிலும் (ரந்தீர்), திருவூரு நகராட்சியில் 13ஆவது வார்டிலும் (நாகமணி) சிபிஎம்வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். அதே போல் சிபிஐ கட்சியும் 6 வார்டுகளில் வெற்றிப் பெற்றுள்ளன. எனவேஆந்திரப் பிரதேச உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் இடதுசாரி கட்சிகள் 12 வார்டுகளைக் கைப்்பற்றியுள்ளன.

அதே போல 3,000க்கும் அதிகமான வார்டுகளை கைப்பற்றிய தெலுங்குதேசம் - பாஜக - ஜனசேனா கூட்டணி 13 மாநகராட்சிகளில் 12-யையும், 79நகராட்சிகளில் 74-யையும் கைப்பற்றின. 500க்கும் மேற்பட்ட வார்டுகளை கைப்பற்றிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 1 மாநகராட்சி, 4 நகராட்சிகளை கைப்பற்றியது. (குறிப்பு : முழுமையான தேர்தல் முடிவு வெளியாகவில்லை)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.