கிருஷ்ணா நதி நீர் வரத்து நிறுத்தம் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆந்திர அரசு நடவடிக்கை
27 Mar 2026, 3:15 pm
<p><strong>கிருஷ்ணா நதி நீர் வரத்து நிறுத்தம் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆந்திர அரசு நடவடிக்கை</strong></p>
<p>சென்னை, மார்ச் 27- சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதி நீர் வரத்து இந்த வாரத்துடன் குறையத் தொடங்குகிறது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வரும் கால்வாயில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகத் தண்ணீர் திறப்பு நிறுத்தப் பட்டுள்ளது. நீர் வரத்து விவரம்: கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் இதுவரை சென்னைக்கு சுமார் 1,000 மில்லியன் கன அடி கிருஷ்ணா நதி நீர் கிடைத்துள்ளது. வியா ழனன்று திருவள்ளூர் மாவட் டம், ஊத்துக்கோட்டை மாநில எல்லையில் வினா டிக்கு 429 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இது இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முழுமையாக நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத் தில் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என ஆந்திர அரசு உறுதி அளித்துள்ளது. குடிநீர் இருப்பு கிருஷ்ணா நதி நீர் வரத்தின் காரணமாகச் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம் பாக்கம் உள்ளிட்ட5 முக்கிய ஏரிகளில் தற்போது 79 சதவீத நீர் இருப்பு உள்ளது (மொத்த கொள்ளளவு 11,757 mcft). இந்த நீர் இருப்பு, வரும் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் வரை சென்னையின் தினசரி குடிநீர் தேவையைப் (1,248 mld) பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்கும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பராமரிப்புப் பணிகள்: பூண்டி ஏரிக்கு வரும் நீர் வரத்து குறைந்தவுடன், நீர்வளத் துறை சார்பில் கண்டலேறு-பூண்டி கால்வாய் மற்றும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிக ளுக்குச் செல்லும் கால்வாய்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இரு மாநில ஒப்பந்தத்தின்படி ஆண்டுதோறும் ஜனவரி-ஏப்ரல் மற்றும் ஜூலை-அக்டோபர் என இரு கட்டங்களாகக் கிருஷ்ணா நதி நீர் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.</p>
