தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மின்வாரியத்தின் மெத்தனம் தாழ்வாக சென்ற மின் கம்பி உரசி ஆந்திர விவசாயி மரணம்

50 minutes before
மின்வாரியத்தின் மெத்தனம் தாழ்வாக சென்ற மின் கம்பி உரசி ஆந்திர விவசாயி மரணம்

மின்வாரியத்தின் மெத்தனம் தாழ்வாக சென்ற மின் கம்பி உரசி ஆந்திர விவசாயி மரணம்

திருவள்ளூர், செப்.26-தாழ்வாக செல்லும் மின் கம்பி உரசியதில், விவசாய தொழிலாளர் வெங்கடேஷ்வரராவ் (வயது 49), மின்சாரம் பாய்ந்து பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் உள்ள வன்னிப்பாக்கதில் நாற்றுப் பறித்து, நடவு செய்ய ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், நந்தமூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ்வரராவ் (வயது 49), என்பவர், ஆட்களை கொண்டுவந்து வெளி ஊர்களுக்கு சென்று விவசாய வேலைகளில் ஈடுபடுவது வழக்கம்,

அதேபோன்று கடந்த வாரம், ஆந்திரமாநிலம், கிருஷ்ணா மாவட்டம், சின்ன நந்தமூறு கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ்வரராவ் என்பவர் 25 தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு, பொன்னேரி அருகில் உள்ள வன்னிப்பாக்கதில் செப் 17 முதல் முனிக்குமார் என்பவர் நிலத்தில் நாற்று பறித்து நடவு செய்யும் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமையன்று (செப் 26), நாற்றுப் பறித்து, நடவு செய்ய வெங்கடேஷ்வரராவ் தலையில் நாற்றை சுமந்து செல்லும் போது, தாழ்வாக தொடங்கி கொண்டு இருந்த மின் கம்பியில் நாற்று உராய்வு ஏற்பட்டு,

மின்சாரம் உடல் முழுவதும் பாய்ந்த நிலையில், அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் மீஞ்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்தில் வெங்கட்ஷ்வரராவ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செயது, உடலை சொந்த ஊருக்கு அனுப்ப நட வடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் உடன் வேலைக்கு வந்த தொழிலாளர்கள், கிராம மக்கள் சோகத்தில் ஆழ்த்தனர்.மீஞ்சூர் காவல்துறையினர் வழங்க பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பலி யான வெங்கடேஷ்வரராவ்க்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.