தீக்கதிர் விரைவு செய்திகள்
16 May 2026, 9:03 pm

4 பெண் தொழிலாளர்கள் பலி 2 பேர் கவலைக்கிடம்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா நகரில் உள்ள கொவ்வூர் பாலத்தைக் கடக்க முயன்ற பெண் தொழிலாளர்கள் குழு ஒன்றின் மீது லாரி மோதியதில், 4 பெண் தொ ழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரி தாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பெண்கள் பலத்த காயங்களுடன், கவலைக்கிடமான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் குழுவினரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் வாசம்சட்டி சத்யவதி (60), பாலிகா கிருஷ்ணவேணி (35), சித்தம்மா (45), செல்லூரி அண்ணாவரம் (45) ஆகி யோர் ஆவர். மட்டாபர்த்தி அருணா குமாரி, பாலிகா நாகமணி ஆகியோர் காக்கிநாடா அரசு பொது மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு, அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என காக்கிநாடா காவல்துறை கூறியுள்ளது.

1.20 லட்சம் பணியிடங்களை வெட்டிக் குறைத்த ம.பி., பாஜக அரசு

இளைஞர்களுக்கு இரண்டு லட்சம் அரசு வேலைகளை வழங்கு வதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த மத்தியப் பிரதேச பாஜக அரசு, 1.20 லட்சம் பணியிடங்களை வெட்டிக் குறைத்துள்ளது. இந்தப் பணியிடங்கள் பொதுப்பணி, சுகாதாரத் துறைகளில் இருந்தன. பொ துப்பணித் துறையில் 16,810 பணியி டங்களும், சுகாதாரத் துறையில் 55,808 பணியிடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், நிரந்தரப் பணியிடங்களில் உள்ள தற்போதைய வெளிப்பணியாளர்களை மார்ச் 2027-க்குள் பணிநீக்கம் செய்யு மாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. நிதிச் சுமையைக் குறைப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு கூறுகிறது. பாஜக அரசு இந்த குடும்பங்களைப் பட்டினியில் தள்ள முயற்சிக்கிறது என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜஸ்விந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்தார். பணியிடங்களை ரத்து செய்வ தற்குப் பதிலாக, தற்போதைய ஊழியர்க ளை நிரந்தரமாக்க வேண்டும் என்றும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதன் மூலம் இரண்டு லட்சம் அரசு வேலைகள் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.