தீக்கதிர் முக்கிய செய்திகள்
31 Oct 2026, 11:36 pm

அந்தமான் கடலில் மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு!

சென்னை, அக்.31 -அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அது உருவான 24 மணி நேரத்துக்குள் புயலாகவும் மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.புதிதாக உருவாகும் புயலுக்கு, இந்தியா பரிந்துரைத்துள்ள ‘முரசு’ என்ற தமிழ்ப் பெயர் சூட்டப்பட உள்ளது. புயலாக வலுவடைந்த பிறகு, மேற்கு, வடமேற்கு திசையில் மத்திய மேற்கு வங்கக்கடல் வழியாக நகர்ந்து, நவ.2 ஆம் தேதி மாலை ஆந்திரக் கடலோரப் பகுதியை நெருங்க வாய்ப்புள்ளது.இதன் காரணமாக வட தமிழகத்தில் மிதமான மழையும், பிற பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

தாம்பரம் - இராமேசுவரம் விரைவு ரயிலில் நவீன பெட்டிகள் இணைப்பு

சென்னை, அக்.31 -தாம்பரம் - இராமேசுவரம் விரைவு ரயிலில் நவீன மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைத்துஇயக்கப்படுகின்றன. இந்த ரயில் தாம்பரத்திலிருந்து இரவு 9.02 மணிக்குப் புறப்படும். மறுமார்க்கத்தில், இராமேசுவரத்திலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் இராமேசுவரம்-தாம்பரம் விரைவு ரயிலில் (எண்: 16752) ஜன.3 ஆம் தேதி முதல் இப்பெட்டிகள் இணைக்கப்படும்.இந்த ரயிலில் ஒரு ஏசி முதல் வகுப்புப் பெட்டி, ஒரு ஏசி இரண்டாம் வகுப்புப் பெட்டி, 4 ஏசி மூன்றடுக்குப் பெட்டிகள், 10 படுக்கை வசதிப் பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு பெட்டி, ஒரு சரக்குப் பெட்டி ஆகியவை இடம்பெறும் என்று திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் சொத்து விவரம் தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

சென்னை, அக்.31 -தமிழக அரசு ஊழியர்கள் IFHRMS இணையதளம் மூலம் சொத்து மற்றும் கடன் விவரங்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31-க்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஊழியர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று இந்தமுடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக் கணக்கை டிசம்பர் 31, 2026 வரை தாக்கல் செய்யலாம்.இதன்பிறகு,ஆண்டுதோறும் மார்ச் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்யாதவர்கள் நன்னடத்தை விதியை மீறியவர்களாகக் கருதப்படுவர் என்று அரசு எச்சரித்துள்ளது. இதைத் தங்கள் கீழ் பணிபுரிவருக்குத் தெரிவிக்குமாறு துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், டிஎன்பிஎஸ்சி மற்றும் உயர்நீதிமன்றப் பதிவாளர்கள் உள்ளிட்ட கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

ரயில்களில் மொபைல்சார்ஜிங் வசதி நிறுத்தம்

சென்னை, அக்.31- ரயில்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணிவரை மொபைல் சார்ஜிங் புள்ளிகள் செயல்படக் கூடாது என்று அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் இந்திய ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சமீபத்தில் பயணி ஒருவரின் பவர் பேங்க் வெடித்துச் சிதறியதையடுத்து, பயணிகள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுஉள்ளது.

ஓ.பன்னீர் செல்வத்திடம் நலம் விசாரிப்பு

சென்னை: காலில் ஏற்பட்ட காயத்தால் சென்னையில் உள்ள இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் வீட்டிலேயே மருத்துவச் சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக வெள்ளியன்று, திமுக இளைஞரணிச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினும் அவரது இல்லத்துக்குச் சென்று உடல்நலம் குறித்தும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

தூய்மைப் பணியாளர் குடும்பங்களுக்கு ‘ஏற்றம்’ திட்டம்!

ரூ.3.05 கோடி மானியம் விடுவிப்புசென்னை: தூய்மைப் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிறு தொழில் தொடங்க உதவும் ‘ஏற்றம்’ திட்டத்தின் கீழ், 3,051 பயனாளிகளுக்குக் கடனுதவி வழங்க ரூ.3 கோடியே 5 லட்சத்து 10 ஆயிரம் மானியத்தைத் தமிழக அரசு விடுவித்து ஆணை பிறப்பித்துள்ளது. நுண்கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடனில் 20 சதவீதம் (ரூ.10,000 வரை)

மானியமாகக் கிடைக்கும். 18 முதல் 60 வயது வரையுள்ள, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குக் குறைவானகுடும்பத்தினர் இதில் பயன்பெறலாம். குழுவாகவோ தனி நபராகவோ விண்ணப்பிக்கலாம்.

ஊராட்சி சிறப்பு அதிகாரிகள்:ரத்து கோரி வழக்கு

சென்னை: ஊராட்சிகளின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, அவற்றை நிர்வகிக்கச் சிறப்பு அதிகாரிகளை நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் இம்மனுவைத் தாக்கல் செய்தார். அரசியலமைப்பின் 243-E பிரிவின்படி, பதவிக்காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வார்டு மறுவரையறை,இடஒதுக்கீட்டுப் பணிகளை முடித்து, நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலக்கெடுவுக்குள் தேர்தல் நடத்த உத்தரவிடுமாறும் கோரியுள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

மகளிர் ஆடு வளர்ப்புக்கு ரூ.109.75 கோடி

சென்னை: மகளிர் ஆடு வளர்ப்புத் திட்டத்துக்குத் தமிழக அரசு ரூ.109.75 கோடி ஒதுக்கியுள்ளது. இதன்கீழ் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட 30,000 பேருக்கு, 100 சதவீத மானியத்தில் தலா 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.

‘பெண்களின் எச்சரிக்கை மணி’: ஸ்டாலின்

சென்னை: திமுக மகளிரணி நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி சாராத பெண்களும் திரளாகப் பங்கேற்றதாகவும், தவெக ஆட்சிக்குப் பெண்கள் எச்சரிக்கை மணி அடித்து விட்டதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எக்ஸ் தளப் பதிவில், மின் கட்டணம், மளிகைச் செலவு, விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சீர்கெட்ட சட்டம்-ஒழுங்கு ஆகியவற்றால் பெண்கள் கோபத்தில் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

குட்கா வழக்கு: நீதிமன்றம் கேள்வி

சென்னை: அதிமுகமுன்னாள் அமைச்சர்கள், காவல்துறை, ஒன்றிய, மாநில அதிகாரிகளுக்கு எதிரான சிபிஐ குட்கா முறைகேடு வழக்கை 3 மாதங்களில் எப்படி முடிப்பீர்கள் என்று, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றததுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஏராளமான சாட்சிகளை விசாரிக்க வேண்டியுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி இக்கேள்வியை எழுப்பினார்.

புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை

புதுச்சேரி: தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாளான நவம்பர் 9 ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.