அந்தமான் நிகோபார் தீவில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் போராட்டம்
18 Jul 2026, 8:47 pm
<p><strong>அந்தமான் நிகோபார் தீவில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் போராட்டம்</strong></p><p>போர்ட் பிளேயர் அந்தமான் நிகோபார் தீவில் அகில இந்திய விவசாய சங்கம் (AIKS) விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாது காக்க 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி யுள்ளது. மேலும் நிலமற்ற அனைவருக்கும் நிலம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் போராட்டத்தின் போது நிலத்தின் அளவைக் கருத்தில் கொள்ளாமல் விவசாயத் துறை அமைச்சகம் மூலம் போதுமான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி களை மானிய விலையில் விவசாயி களுக்கு தடையின்றி வழங்க வேண்டும். தரமான விதைகளை விவசாயத் துறை மூலமாகவே வழங்க வேண்டும். உரங்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படு வதைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் பாலுக்கான விலை யை உயர்த்த வேண்டும். பாக்குக் கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை ஒரு கிலோ 400 ரூபா யாக நிர்ணயிக்க வேண்டும். முதிர்ந்த உரித்த தேங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்த வேண்டும்.சரியான இடங்களில் மதகுகளை அமைக்க வேண்டும். உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் போன்றவற்றை தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வணிகம் செய்வதை நிறுத்த வேண்டும். சுனாமியால் பாதிக்கப்பட்ட தெற்கு அந்தமான் விவசாயிகளுக்கு மாற்று விவசாய நிலங்களை ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன் வைத்தனர். வடக்கு, தெற்கு,மத்திய அந்த மான் பகுதிகளில் இப்போராட்டம் நடந்துள்ளது. போராட்டத்தில் அகில இந்திய விவசாய சங்க மாநிலக் குழுத் தலைவர் டாக்டர் கௌரங்கா மஜி,மாநிலச் செயலாளர் எஸ்.ஆர். மிருதா, சிஐடியு (CITU) மாநிலச் செய லாளர் ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று சிறப்பு ரையாற்றினர். லெப்ட் வியூஸ் </p>
