தென்பெண்ணையில் பழங்கால சுடுமண் பொம்மைகள் கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர்கள் தகவல்
9 Oct 2026, 1:36 am

தென்பெண்ணையில் பழங்கால சுடுமண் பொம்மைகள் கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர்கள் தகவல்

கடலூர், அக்.8 –கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றுப் படுகையில் மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு கள ஆய்வில் பழங்காலத்தைச் சேர்ந்த சுடுமண் மிருக உருவ பொம்மைகள், குழந்தையின் கால் பகுதி மற்றும் 7 வட்டச்சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எனதிரிமங்கலம், அக்கடவல்லி மற்றும் கண்டரக்கோட்டை ஆகிய பகுதிகளில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் இணைந்து இந்த கள ஆய்வை மேற்கொண்டனர். அப்போது 15 செ.மீ. நீளத்தில் முட்டியிட்டு அமர்ந்த நிலையிலும், கழுத்துப் பகுதியில் கோட்டுருவ அலங்காரத்துடனும் ஒரு சுடுமண் மிருக உருவமும், 4 செ.மீ. நீளத்தில் மற்றொரு மிருகத்தின் தலைப்பகுதியும் கண்டெடுக்கப்பட்டன. மேலும், குழந்தையின் கால் பகுதி மற்றும் பழங்கால மக்களின் பொழுதுபோக்கு விளையாட்டுடன் தொடர்புடைய 7 வட்டச்சில்புகளும் கிடைத்துள்ளன.

இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் வாழ்ந்த பழங்கால மக்களின் கலைத்திறன் மற்றும் அவர்களின் பொழுதுபோக்கு வாழ்க்கை முறையை அறிய முடிகிறது என்று தொ