தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊருக்கு உணவளித்த மனிதநேய மடம் ஊருக்கு உணவளித்த மனிதநேய மடம்

27 Oct 2026, 10:32 pm
ஊருக்கு உணவளித்த மனிதநேய மடம் ஊருக்கு உணவளித்த மனிதநேய மடம்

ஊருக்கு உணவளித்த மனிதநேய மடம் ஊருக்கு உணவளித்த மனிதநேய மடம்

திண்டுக்கல், அக்.27-தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே சிந்தாமணிப்புதூரில், ஏழை மக்களுக்கு உணவளிக்க நிலம் தானமாக வழங்கப்பட்டதைப் பதிவு செய்யும் 12 வரிக் கல்வெட்டும், பழங்காலச் சிற்பங்களும் கண்டறியப்பட்டுள் ளன.

தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், கொல் லம் ஆண்டு 1080-ஐக் குறிப்பிடும் கல்வெட்டு கண்டறியப்பட்டது. அதன்படி,பெருமாள் குடும்பன் என்பவர் நாரணபுரத்தில் 17 தூண் களுடன் மடம் அமைத்து, அதன் பராமரிப்புக்காக 2 ஏக்கர்12 சென்ட் நிலத்தை வழங்கியுள்ளார். அந்த நிலத்தின் வருவாயைக் கொண்டு நாள்தோறும் ஏழை, எளியவர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனத் தனது மூன்று மகன்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மடத்தில் உள்ள இரண்டு தூண்களில் ஆண், பெண் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. அவை பெருமாள் குடும்பனின் பெற்றோரான கடுவாயன் ராமக்குடும்பன், அவரது மனைவி இருளி ஆகியோரைக் குறிப்பதாக அவர்களது வாரிசுகள் தெரிவிக்கின்றனர். புலியுடன் போரிட்டு வீரமரணம் அடைந்தவர்களைக் குறிக்கும் அடைமொழியாக ‘கடுவாயன்’ இருந்திருக்கலாம் என ஆய்வாளர் கருதுகிறார்.பிறருக்கு உணவளிப்பதைத் தானமாகக் கருதாமல், மனிதக் கடமையாகப் போற்றிய பெருமாள் குடும்பனின்பண்பாட்டையும் மனிதநேயத்தையும் இந்தக் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. காலப்போக்கில் வாரிசுகள்இடம்பெயர்ந்ததால் உணவளிக்கும் நடைமுறை நின்றுபோய், மடம் தற்போது சிதைந்த நிலையில் காணப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.