தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

40 ஆண்டுகளாகியும் வழங்கப்படாத இலவச வீட்டுமனை பட்டா அஞ்செட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

6 Nov 2026, 12:33 am
40 ஆண்டுகளாகியும் வழங்கப்படாத இலவச வீட்டுமனை பட்டா  அஞ்செட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

40 ஆண்டுகளாகியும் வழங்கப்படாத இலவச வீட்டுமனை பட்டா அஞ்செட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி, நவ.5-கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம் கோட்டையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலவச வீட்டு மனை நிலத்தை 40 ஆண்டுகள் கடந்தும் ஒப்படைக்காததை கண்டித்து, அஞ்செட்டி பேருந்து நிலையத்தில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டையூர் கிராமத்தில் 1985-ஆம் ஆண்டு சர்வே எண்கள் 179, 180-ல் உள்ள 1.76 ஏக்கர் நிலத்தை

பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக ஆதிதிராவிடர் நலத்துறையால் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசா ணையும் வெளியிடப்பட்டது. ஆனால், 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் பல்வேறு காரணங்களைக் கூறி அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வந்ததால், இதுவரை பயனாளிகளுக்கு நிலம் ஒப்படைக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், தனி வட்டாட்சியர், சார் ஆட்சியர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தியும் நிலம் வழங்கப்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 30.09.2024 அன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசு ஒதுக்கீடு செய்த நிலத்தைக் கைப்பற்றும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய கிருஷ்ணகிரி ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியரும், அஞ்செட்டி வட்டாட்சியரும் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று இரு மாதங்களுக்குள் நிலத்தை அளவீடு செய்து, பட்டாவுடன் நிலத்தை ஒப்படைப்பதாக வாக்குறுதி அளித்த னர். ஆனால், அந்த வாக்குறுதியும் இதுவரை நிறை வேற்றப்படவில்லை.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, மக்களுக்கு பட்டா வழங்கி, நிலத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் பி.தேவராஜன் தலைமை தாங்கினார். பாதிக்கப்பட்ட பயனாளிகள் பசுவராஜ், சங்கரன், சித்தபைரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ஆனந்தகுமார், மாவட்டச் செயலாளர் சி.கணேஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை யாற்றினர்.

மேலும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், ஆர்.நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் மற்றும் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இராதா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.