தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அன்பு மருத்துவமனை நிறுவனர்  டாக்டர் ஜி. ராஜேஸ்வரன் காலமானார்!

17 Feb 2026, 3:36 pm
அன்பு மருத்துவமனை நிறுவனர்  டாக்டர் ஜி. ராஜேஸ்வரன் காலமானார்!
<p><strong>அன்பு மருத்துவமனை நிறுவனர்&nbsp; டாக்டர் ஜி. ராஜேஸ்வரன் காலமானார்!</strong></p> <p>திண்டுக்கல், பிப். 17 - &nbsp;திண்டுக்கல் அன்பு &nbsp;மருத்துவமனை நிறுவன ரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் மூத்த உறுப்பின ருமான டாக்டர் ஜி. ராஜேஸ்வ ரன் (76) உடல்நலக் குறை வால் காலமானார். டாக்டர் ஜி. ராஜேஸ்வ ரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மறைந்த &nbsp;தலைவர்கள் ஆர். உமா நாத், பாப்பா உமாநாத் ஆகி யோரின் மருமகன் மற்றும் &nbsp;டாக்டர் லட்சுமி நேத்ராவதி யின் கணவர் ஆவார். தேனி மாவட்டம் அமச்சி யாபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜேஸ்வரன், மதுரை &nbsp;அரசு மருத்துவக் கல்லூரி யில் படிக்கும் போதே, இந்திய மாணவர் சங்கத்தில் செயற்பாட்டாளராக இருந்து &nbsp;மாணவர் போராட்டங்களில் பங்கேற்றார். பின்னர், திண்டுக் கல்லில் ரோஜா விலாஸ் எதிரே சிறிய கட்டடத்தில் மருத்துவ சேவையைத் தொடங்கிய அவர், ஏழை, எளிய மக்களிடம் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே பெற்று &nbsp;சிகிச்சை அளித்தார். தனது மனைவி டாக்டர் லட்சுமி &nbsp;நேத்ராவதியுடன் இணைந்து, அன்பு மருத்துவ மனையைத் தொடங்கியும் பொதுமக்களுக்கு சேவை யாற்றினார். எளிய மக்களின் மருத்து வராக போற்றப்பட்ட டாக்டர் ராஜேஸ்வரன், மது ரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்தார். அவரது உடல் &nbsp;திண்டுக்கல் பாண்டியன் நக ரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக் காக வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உட்பட &nbsp;பலரும் அஞ்சலி செலுத்தி னர். புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்கு இறுதி ஊர்வல மும், அதன்நிறைவில் திண்டுக்கல் ஆர்.எம். காலனி யில் உள்ள மின் மயானத் தில் உடல் தகனம் தகனம் செய்யப்படுகிறது. டாக்டர் ராஜேஸ்வரன் - நேத்ராவதி தம்பதியருக்கு டாக்டர் வினோத், டாக்டர் அமுதநிலவன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.