ஒன்றிய அரசு மிரட்டினாலும் ஆட்சிக்கு வருபவர்கள் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது! திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
9 May 2026, 12:29 am
<p><strong>ஒன்றிய அரசு மிரட்டினாலும் ஆட்சிக்கு வருபவர்கள் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது! திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி</strong></p><p>திருச்சிராப்பள்ளி, மே 8- திருச்சியில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், வெள்ளி யன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசி னார். அப்போது அவர் கூறுகையில், “பன்னி ரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது கூடுதல் மகிழ்ச்சி அளிக் கிறது. மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பி.எம்ஸ்ரீ திட்டத்தை ஏன் வேண்டாம் என்பதை ஏற்கனவே விளக்கி உள்ளோம். இருமொழிக் கொள்கையே தமிழ்நாட்டிற்கு போதுமானது. ஒன்றிய அரசு என்ன கூறி மிரட்டினாலும், ஆட்சிக்கு வருவது யாராக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள கூடாது. நீங்கள் எடுக்கும் முடிவில் ஒட்டுமொத்த தமி ழகம் உங்கள் பின்னால் நிற்கும். தமிழகத் தின் நலன் சார்ந்து அனைவரும் ஓரணியில் நிற்போம்” என்றார்.</p>
